கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத சென்ற மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை, அனைவருக்கும் யூனிபோர்ம் கட்டாயம் என்பதால் அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, இந்த முஸ்கான் என்ற மாணவி ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்றார் அப்போது அவர் அல்லாஹு அக்பர் என ஹோசம் போட்டதுடன் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும் பேசினால்.
இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் முஸ்கானை வெகுவாக பாராட்டினர், இது ஒருபுறம் என்றால் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது, உலக நாடுகளால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான அல் கொய் தா அமைப்பை சேர்ந்த தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரி மாணவி முஸ்கானைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகின் மிக பயங்கரமான தீவிரவாதியாக, உலக நாடுகளால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான இந்த ஜவாஹிரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலுக்கு மாறாக மீண்டும் வீடியோ மூலம் தோன்றியதுடன், தான் பேசிய 7 நிமிட வீடியோவில் ஜவாஹிரி மாணவி முஸ்கான் கானை வெகுவாக பாராட்டி இருந்தார்.
இவரின் பாராட்டுக்கு மாணவியின் தந்தை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார் . இதுதொடர்பாக மாணவி முஸ்கான் கானின் தந்தை முகமது ஹுசைன் அளித்த பேட்டியில், "நேற்று பிற்பகலில் தான் இந்த விவகாரம் எனக்கு தெரிந்தது.
ஜவாஹிரி யார் என்றுக் கூட எனக்குத் தெரியாது. அவர் என் மகள் பெயரை பயன்படுத்து மிகத் தவறு. எங்களது தாய் நாடான இந்தியாவில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.எங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவை இல்லை. இதுபோன்றவர்கள் தான் எங்களது அமைதியை கெடுக்கிறார்கள். ஒற்றுமையின்மையை உருவாக்குகிறார்கள்.
மாண்டியாவில் பிறந்த நாங்கள் இங்கு சகோதரர்களை போலவே வாழ்ந்து வருகிறோம். சில சம்பவங்கள் நடந்திருக்க கூடாது. இப்போது எங்களால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. எங்களின் அமைதியின்மைக்கு என்ன காரணம் என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் .
ஹிஜாப் அணிந்து சென்றதற்காக எனது மகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. முஸ்கான் அடுத்த வருடம் தனது படிப்பை தொடருவார். முடிந்தவரை எங்கு ஹிஜாப் அனுமதிக்கப்படுகிறதோ அங்கு அவரை சேர்த்து நான் படிக்க வைப்பேன்.
ஜவாஹிரி வீடியோ தொடர்பாக முஸ்கானிடம் நிலவரத்தை கூறினேன் அதை கேள்விப்பட்டு அவள் மிகவும் கலக்கமடைந்தாள். ஏற்கனவே தனது கல்வியை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் முஸ்கானுக்கு இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியைத் தான் கொடுக்கின்றன" என்று முகமது ஹுசைன் வேதனை தெரிவித்தார்.
மொத்தத்தில் ஹிஜாப் விஷயம் தலைகீழாக மாறி முஸ்கான் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது, ஒருபுறம் படிப்பு பாதியில் நின்றுவிட்டது மறுபுறம் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பாராட்டு தெரிவித்த காரணத்தால் இனி என்னென்ன மாற்றங்கள் அரங்கேற போகிறதோ என முஸ்கான் குடும்பமே வேதனையில் சிக்கி சிதைந்து வருகிறதாம்.
இதெல்லாம் தேவையா படிக்கிற வயதில் படிப்பை மட்டும் பார்த்து இருந்தால் இந்நேரம் இப்படி வீட்டில் முடங்கும் சூழல் வருமா என முஸ்கான் குடும்பத்தினரே அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனராம்.