தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் இருவரும் நேற்று மாலை சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்ல திருமண விழாவில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இருவர் சந்தித்த புகைப்படங்களை முக்கிய செய்தி நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டனர் இந்த சூழலில் அந்த செய்தி வெளியாகி 24 மணி நேரம் கடப்பதற்குள் மற்றொரு முக்கிய அறிவிப்பு விஜய் தரப்பில் வெளியாகி இருக்கிறது.
அது பின்வருமாறு அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும்எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும்எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின்,கடுமையான உத்தரவின் பேரில், ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம்.
அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும், நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டுநீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன் என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
அதாவது விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியான போது காவி நிறத்தில் இருக்கும் கட் அவுட் ஒன்றை கிழித்த படி வெளியே வருவார் விஜய், இதை பாஜகவிற்கு எதிரான குறியீடு என திமுகவினர் மற்றும் பாஜக எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சியினர் பகிர்ந்து வந்தனர். திமுகவை சேர்ந்த சல்மா பீஸ்ட் படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சூழலில் சில விஜய் ரசிகர்கள் காவி நிற கட் அவுட்டில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டி அதனை விஜய் கிழிப்பது போன்று சில தகவல்களை பரப்ப இது கடும் சர்ச்சையை உண்டாக்கியது, இந்த சூழலில் தான் இதனை அதே சினிமா துறையை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் விஜய் மக்கள் இயக்க தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அவர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏன் இவ்வாறு செய்கிறார்கள் உடனடியாக இது குறித்து அழுத்தம் திருத்தமாக அறிக்கை வெளியிடுங்கள் என விஜய் அறிவுறுத்தியதன் பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.