24 special

ரொம்ப குடைச்சலா இருக்கே..? அண்ணாமலை பெயரை கேட்டதும் உதயநிதி செய்த காரியம்...!

Udhayanidhi,annamalai
Udhayanidhi,annamalai

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பிறகு பாஜகவில் இணைந்து தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று இரண்டு வருடங்களாகி உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் தமிழக முழுவதும் பாஜக என்ற கட்சி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொருவராலும்  கண்கூட பார்க்க முடிகிறது. தற்போது ஆளுங்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது.  இவை அனைத்திற்கும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றதுதான் என முக்கிய முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

ஏனென்றால் இவர் திமுகவிற்கு ஒவ்வொரு வகையிலும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் இதுவரையில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளிக்கொண்டு வருவேன் என்று செய்தியாளர்கள் மத்தியில் உரக்க கூறியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் திமுகவின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். இதனால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. இதனிடையில் அவ்வப்போது திமுக மக்களுக்கு செய்து வரும் ஊழல் மற்றும் ஏமாற்று வேலைகளை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தும் வருகிறார். 

அதோடு திமுகவின் சொத்து பட்டியலில் இரண்டாம் பாகத்தையும் இனிவரும் காலங்களில் வெளியிட போவதாகவும் என் மண் என் மக்கள் என்ற பாதியாத்திரையை ஜூலை 28ல் தொடங்கி அடுத்த வருடம்  ஜனவரி 11 வரை மேற்கொண்டு மூளை முடுக்கெல்லாம் மக்களை சந்தித்து அண்ணாமலை  உரையாற்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாதயாத்திரையை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாகவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னையில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்  உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது செய்தியாளர்கள் உதயநிதியிடம், 'தமிழக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்ட திட்டத்தில் 80 சதவீத மக்களுக்கு பணம் கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார் அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர் கேட்ட பொழுது எப்பொழுதும் நிதானமாக சிரித்துக் கொண்டே பேசும் உதயநிதி ஸ்டாலின் இந்த கேள்வியை கேட்டதும் சட்டென்று முகம் மாறி கோபமடைந்தார். திடீரென சமாளித்துக்கொண்டு செய்தியாளர்களிடம், 'ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறினார்களே அதில் 15 ரூபாய்யாசும் அவர்களால் போட முடிந்ததா?' என்று முகம் சுளிப்புடன் பதில் அளித்துவிட்டு குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை பற்றி அவர் பேசுவதற்கு அருகதை இல்லை என்று கூறி அங்கிருந்து உடனே நகர்ந்தார். 

இதன் பின்னணியில் அண்ணாமலை திமுகவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதும் அதனை எப்படி சமாளிக்கலாம் என்று தெரியாமல் திமுக திணறி வருவதும் இதன் காரணமாகவே அண்ணாமலை பெயரை எடுத்தால் திமுகவின் தலைவர்கள் குறிப்பாக முதல்வர் குடும்பத்தினர் கோபமடைவதும் தெரிகிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதம் 1000 ருபாய் உரிமை தொகை திட்டத்தில் குறைந்த மகளிருக்கே  கொடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும் இதன் மொத்த பொறுப்பும் அமைச்சர் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தில் திமுக அரசு செய்த தவறை அண்ணாமலை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்காக பாஜகவினருக்கு உத்தரவிட்டிருப்பதாலும். இந்த விவகாரத்தில் அண்ணாமலை பெரும் தலைவலியாக இருப்பார் என உணர்ந்து எப்பொழுதும் செய்தியாளர்கள் மத்தியில் கூலாக சிரித்துக் கொண்டு பதில் சொல்லும் உதயநிதி அண்ணாமலை என்ற பெயரெடுத்தவுடன் கோபமடைந்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் அண்ணாமலை தான் தனது எதிர்கால அரசியலுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப் போகிறார் என உதயநிதி நினைத்திருப்பதாகவும் தெரிகிறது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பிறகு பாஜகவில் இணைந்து தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று இரண்டு வருடங்களாகி உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் தமிழக முழுவதும் பாஜக என்ற கட்சி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொருவராலும்  கண்கூட பார்க்க முடிகிறது. தற்போது ஆளுங்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது.  இவை அனைத்திற்கும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றதுதான் என முக்கிய முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

ஏனென்றால் இவர் திமுகவிற்கு ஒவ்வொரு வகையிலும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் இதுவரையில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளிக்கொண்டு வருவேன் என்று செய்தியாளர்கள் மத்தியில் உரக்க கூறியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் திமுகவின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். இதனால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. இதனிடையில் அவ்வப்போது திமுக மக்களுக்கு செய்து வரும் ஊழல் மற்றும் ஏமாற்று வேலைகளை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தும் வருகிறார். 

அதோடு திமுகவின் சொத்து பட்டியலில் இரண்டாம் பாகத்தையும் இனிவரும் காலங்களில் வெளியிட போவதாகவும் என் மண் என் மக்கள் என்ற பாதியாத்திரையை ஜூலை 28ல் தொடங்கி அடுத்த வருடம்  ஜனவரி 11 வரை மேற்கொண்டு மூளை முடுக்கெல்லாம் மக்களை சந்தித்து அண்ணாமலை  உரையாற்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாதயாத்திரையை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாகவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னையில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்  உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது செய்தியாளர்கள் உதயநிதியிடம், 'தமிழக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்ட திட்டத்தில் 80 சதவீத மக்களுக்கு பணம் கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார் அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர் கேட்ட பொழுது எப்பொழுதும் நிதானமாக சிரித்துக் கொண்டே பேசும் உதயநிதி ஸ்டாலின் இந்த கேள்வியை கேட்டதும் சட்டென்று முகம் மாறி கோபமடைந்தார். திடீரென சமாளித்துக்கொண்டு செய்தியாளர்களிடம், 'ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறினார்களே அதில் 15 ரூபாய்யாசும் அவர்களால் போட முடிந்ததா?' என்று முகம் சுளிப்புடன் பதில் அளித்துவிட்டு குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை பற்றி அவர் பேசுவதற்கு அருகதை இல்லை என்று கூறி அங்கிருந்து உடனே நகர்ந்தார். 

இதன் பின்னணியில் அண்ணாமலை திமுகவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதும் அதனை எப்படி சமாளிக்கலாம் என்று தெரியாமல் திமுக திணறி வருவதும் இதன் காரணமாகவே அண்ணாமலை பெயரை எடுத்தால் திமுகவின் தலைவர்கள் குறிப்பாக முதல்வர் குடும்பத்தினர் கோபமடைவதும் தெரிகிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதம் 1000 ருபாய் உரிமை தொகை திட்டத்தில் குறைந்த மகளிருக்கே  கொடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும் இதன் மொத்த பொறுப்பும் அமைச்சர் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தில் திமுக அரசு செய்த தவறை அண்ணாமலை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்காக பாஜகவினருக்கு உத்தரவிட்டிருப்பதாலும். இந்த விவகாரத்தில் அண்ணாமலை பெரும் தலைவலியாக இருப்பார் என உணர்ந்து எப்பொழுதும் செய்தியாளர்கள் மத்தியில் கூலாக சிரித்துக் கொண்டு பதில் சொல்லும் உதயநிதி அண்ணாமலை என்ற பெயரெடுத்தவுடன் கோபமடைந்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அண்ணாமலை தான் தனது எதிர்கால அரசியலுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப் போகிறார் என உதயநிதி நினைத்திருப்பதாகவும் தெரிகிறது.