24 special

இந்த படையே வேற கண்ணா..! அண்ணாமலை தயார் செய்த புது சோல்ஜர்ஸ்..!

Udhayanidhi,annamalai
Udhayanidhi,annamalai

அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாத கால இடைவெளியே உள்ள காரணத்தினால் ஒவ்வொரு கட்சியும் தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்து வருகிறது. ஆனால் தமிழக பாஜக இந்த வருட தொடக்கத்தில் இருந்தே தனது பணிகளை ஆரமித்துவிட்டது என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலை இதுவரை வெளிவராத திமுகவின் சில சொத்து மற்றும் ஊழல்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியில் வெளியிட்டு திமுகவின் ஒவ்வொரு வழியையும் தடைசெய்து வருகிறார். 


அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கூட்டங்களை நடத்தி பம்பரமாக பாஜக தனது தேர்தல் களப்பணிகளை செய்து வருகிறது. தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய அளவில் உள்ள பாஜக தலைவர்களும் அவ்வப்போது தமிழகத்திற்கு வருகை புரிந்து மக்களிடம் உரையாற்றி செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு தொகுதியில் யாரை நிறுத்தலாம் எந்தெந்த தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இன்னும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது அந்த அளவிற்கு இரு கட்சிகளுக்கு  இடையே மோதல்கள் வெடித்து வந்த நிலையில் பாஜகவை வலுப்படுத்த அண்ணாமலை பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை மாற்றினார். 

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருந்து வர அண்ணாமலை திமுகவின் சொத்துப்பட்டியலின் இரண்டாம் பாகத்தை அடுத்த வாரத்தில் வெளியிட உள்ளதாகவும் அதோடு இந்த மாத இறுதியில் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரியை தொடர்ந்து நடத்தி மக்களிடம் நேரில் சென்று பேச உள்ளதாகவும் பாஜக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதுவே போதும் இதிலிருந்து அடுத்த தேர்தலில் நமக்கு என்ன இடம் என்பது நமக்கு  தெரிந்து விட்டது என்று திமுக அச்சத்திலும் குழப்பத்திலும் இருந்து வருகின்ற சமயத்தில் பாஜகவின் ஆதரவு சமூக வலைதள முக்கியஸ்தர்கள், தேசிய சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த பத்தாம் தேதி அன்று திருப்பூரில் அண்ணாமலை தலைமையில் 'பிளான் யுவர் டே வித் அண்ணா' என்று தலைப்பில் பாஜகவை ஒன்பது ஆண்டு கால சாதனையை பற்றி எடுத்து கூறி அதில் முக்கியமான தேர்தல் விஷயங்களைப் பற்றி அண்ணாமலை கலந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. 

அதுவும் அண்ணாமலை இந்த அரங்கத்திற்கு நுழைவதற்கு முன்பாகவே அவரது கட்சிக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து அவரை வரவேற்றதை பார்த்து அண்ணாமலையையே சற்று திணறிப்போனார். பிறகு அரங்கத்திற்குள் நுழைந்த உடன் அனைவரும் செல்போனை ஆப் செய்து வைத்துக் கொள்ளுங்கள் பிரஸ், மீடியாக்கள் யாரும் இருக்க வேண்டாம் அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று கூறிவிட்டு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பற்றியும் அதற்கு கட்சி மேற்கொள்ள உள்ள ஒவ்வொரு நடவடிக்கைகளை பற்றியும் கலந்தாலோசித்து பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், சில விஷயங்கள் அலசியதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை மேலும் பல அதிரடிகளை திட்டங்களை கலந்துகொண்டவர்களிடத்தில் கூறியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் இதுபோல் வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் கூட்டங்கள் நடத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும், இந்த கூட்டத்தில் சில முக்கிய கூட்டங்களுக்கு அண்ணாமலையே நேரடியாக கலந்துகொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லால் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் இவர்களின் பங்கு வேற லெவலில் இருக்கும் என்வும் பாஜக தரப்பில் கிசுகிசுகின்றனர்.