24 special

அப்போ கன்பார்ம் கூப்புதான்...! ரிப்போர்ட்டை பார்த்ததும் இடிந்து உட்கார்ந்த திமுக கூட்டணி..!

Thirumavalavan,mk stalin
Thirumavalavan,mk stalin

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன் முறையாக உருவாக்கப்பட்ட பொழுது பொது சிவில் சட்டம் என்ற ஒன்று அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் அடைந்த அன்றைய காலத்திலே பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் டாக்டர் அம்பேத்கர் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது இருந்த சில அரசியல் காரணங்களால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்யிற்று, அப்படி என்னதான் இந்த பொது சிவில் சட்டம் கூறுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான தனிப்பட்ட சட்டங்களை பின்பற்றுவதை இது குறிக்கிறது. அதாவது திருமணம், குழந்தைகள் தத்தெடுப்பு, மறுமணம், விவாகரத்து, சொத்துக்களை பிரித்தல் போன்றவற்றிற்கு ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதை ஒரே முறையான சட்டமாக மாற்றுவதே பொது சிவில் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது இருப்பினும் தேசிய அளவில் சில கட்சிகள் இதனை எதிர்த்து வருகின்றனர். அதே சமயத்தில் சில கட்சிகளும் ஆதரித்து வருகின்றனர். இதில் பாஜக அரசை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்த கூட்டத்தில் இடம்பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சியும் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசியலிலும் பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிற பொது சிவில் சட்டம் பற்றி மக்களிடத்தில் என்ன கருத்து நிலவுகிறது இன்னும் தெரியாத புதிராக இருந்து வருகிறது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது என்று அதன் இடைகால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தது பெரும் பரப்பையை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகி அதிமுகவிற்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இப்படி பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் நிலவி வருகின்ற சமயத்தில் சிறு தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பொது சிவில் சட்டம் தொடர்பாக மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான முடிவுகள் கிடைத்துள்ளது. அதாவது 44 வயதிற்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்களிடம் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது, அதில் திருமணம் தத்தெடுப்பு வாரிசுரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களில் ஒரே மாதிரியான சட்டத்தை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு 59.6% பேர் ஆம் என்று பதிலத்துள்ளனர். மேலும் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யும் முறை முஸ்லிம் ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 71.2 % பேர் இல்லை என்றும், சொத்துக்களுக்கான வாரிசு உரிமையில் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்றதற்கு 77.9% பேர் ஆம் என்றும், விவாகரத்து பெற்றவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்க பட வேண்டுமா என்ற கேள்விக்கு 68.6% பேர் ஆம் எனவும், மதம் எதுவாக இருந்தாலும் தத்தெடுப்பு அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கும் ஆம் என்று 61.8% பேர் பதில் அளித்து பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் வகையிலான முடிவுகள் இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

அதாவது சிறுபான்மையினர் மக்களுக்கு பொது சிவில் சட்டம் ஆபத்தானது, அவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை வைத்து வரும் தேர்தலை சந்திக்கலாம் என்று திமுக கூட்டணி நினைத்த நிலையில் பொது சிவில் சட்டத்திற்கு சிறுபான்மையினர் மக்கள் இப்படி ஆதரவு தெரிவிப்பது காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.