தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா இவர் கடந்த 2004ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதல் செய்து திருமணம் முடித்து கொண்டார் அதன் பிறகு மற்ற ஹீரோக்களுடன் நடிப்பதை விடுத்த ஜோதிகா குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்தார். அதன் பிறகு தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். செக்க சிவந்த வானம், 36 வயதினிலே, மகளிர் மட்டும் என பெண்களை கவரும் விதமான படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது, மக்கள் இடத்தில ஜோதிகாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது முன்பு போல் வாய்ப்பு வராமல் இருப்பதால் முன்னணி இயக்குனர்களை வம்பிழுத்துள்ளார் இந்த சம்பவம் சினிமா துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஜோதிகா காதல் தி கோர் என்ற மலையாள படத்தில் நடிகர் மம்முட்டியுடன் நடித்திருந்தார், இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா பேசுகையில், " நான் கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த சினிமா துறையில் இருக்கிறேன். எனக்கு மிகவும் வருத்தமான ஒரு விஷயம் இருக்கிறது. அதை நான் இங்கு சொல்லி தான் ஆக வேண்டும். சில பெரிய படங்களில் என்னை நடிக்கச் சொல்லி கேட்டார்கள். ஆனால் எனக்கு அந்த படங்களில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிதான முக்கியத்துவமே இல்லை.
பலமுறை, இப்படியான கதாபாத்திரத்திற்கு ஏன் என்னை கேட்கிறீர்கள் என்று என்னை சந்திக்க வரும் இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன் நான் இந்த துறையில் 25 வருடங்களாக நடிகையாக பயணித்திருக்கிறேன்! என்னிடம் வந்து ரெண்டு சீன் கொடுங்கள், என்றெல்லாம் கேட்பார்கள். அது உண்மையில் எவ்வளவு கேவலமான கேள்வி? இரண்டு மூன்று சீன்கள் நன்றாக இருந்தால் நானே அந்த படங்களில் நடிப்பேன். நீங்கள் இவ்வளவு தூரம் இவ்வளவு பெரிய படங்களில், என்னை கமிட் செய்ய வருவதற்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால் எனக்கு படத்தில் சீன்கள் எங்கே…? நான் ஏதோ சும்மா கதாநாயகன் பக்கத்தில் இருந்து கொண்டு செல்ல முடியாதல்லவா? இந்த இடத்தில் நான் அவமதிக்க பட்டதாக உணர்கிறேன்” என பேசினார்.
இந்நிலையில் இயக்குனர்கள் நடிகர்கள் பின்னாடியே செல்வதாக விமர்சனம் செய்த் ஜோதிகாவுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் படம் முழுமையாக மக்களிடம் செல்வதில்லை இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு ஆண் நடிகருக்கு இணையாக பெண் நடிகைகள் சம்பளம் கேட்பதாகவும் இதனால் படம் எடுத்தால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. மேலும், சமூக போராளியாக இருக்கும் நீங்கள் உங்களது கணவர் ஏன் இப்போது சமூகத்தில் எவ்ளவோஅவலநிலை ஏற்பட்டாலும் மவுனம் காத்து வருகின்றனர். ஆட்சி மாறும் போது நீங்களும் மாறி கொள்கிறீர்கள் என சினிமா துறையில் இருப்பவர்களே சிவகுமார் குடும்பத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.