ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. லால்சலாம் படம் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சூழலில் பிரபல திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன் ரஜினிகாந்த் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தன்யா கலந்து கொண்டார். அப்போது, ப்ளு சட்டை மாறன் தான்ய நடித்தது குறித்து கண்டனம் தெரிவித்து இதையெல்லாம் தலைவர் கண்டுகொள்ளமாட்டார் என விமர்சனம் செய்திருந்தார். தான்ய பாலகிருஷ்ணன் தமிழர்களை குறித்து விமர்சனம் செய்யும் வகையில் இணயத்தில் பதிவிட்டிருந்தார் தமிழ் படத்திலும் நடிக்க மாட்டேன் என விமர்சனம் செய்திருந்தார்.
அதன்பிறகு, நடிகர் விஜய் அரசியல் வந்தது குறித்து ப்ளு சட்டை மாறன் வாழ்த்து தெரிவித்து ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை என தெரிவித்தார். ஆடியோ வெளியிட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பாவை சங்கி என அழைப்பது கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தார் இதற்கும் ப்ளு சட்டை மாறன் விளக்கம் கொடுத்து விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. அதில், ரஜினிகாந்த் விளையாட்டை வைத்து மதத்தை கலந்து உள்ளீர்கள், குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்துள்ளீர்கள் என ஒரு வசனம் வரும் அதனை கொண்டு தற்போது ப்ளு சட்டை மாறன் ரஜினிகாந்தை விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது . அப்போது பாகிஸ்தான் வீரர்களை இந்திய ரசிகர்கள் விமர்சிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பினர் இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். நடிகர்களும் சிலர் விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என கூறினர். அது சர்ச்சை ஓய்ந்த நிலையில், தற்போது இணையத்தில் "விளையாட்டுல மதத்தை கலக்காதீங்க - மொய்தீன் பாய், லால் சலாம். கிரிக்கெட் ஸ்டேடியத்துல ஜெய் ஸ்ரீராம்னு ரசிகர்கள் கோஷம் போட்டப்ப இதை சொல்லாம.. இப்ப படத்துல வந்து பஞ்ச் பேச வேண்டியது" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் நிஜத்தில் நடிக்க அறியாத தெரியாத தலைவர் சினிமாவில் எழுதி கொடுத்த பஞ்ச், தத்துவ வசனம், துணை கதாபாத்திரங்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் மற்றும் இமயமலை ஆன்மீகம் இதை வைத்தே கல்லா கட்ட முடியும்னா... இது எப்பேற்பட்ட சதுரங்க வேட்டை? என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.