பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் பாலா. தனது திறமையை மட்டுமே நம்பிக் கொண்டு சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாவிற்கு அடுத்தடுத்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தனது முதல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர், அதற்குப் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் இன்னும் பலரது ரசிகர்களை தன் வசமாக்கினார். இந்த நிகழ்ச்சி மூலமாக அவரது ரசிகர்கள் பட்டாலும் அதிகமானது. எளிய குடும்பத்தில் இருந்து வந்த இவர் இந்த நிகழ்ச்சி மூலமாக தனக்கென்று தனி அடையாளத்தை பெற்று சில திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
அதற்குப் பிறகு தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்த கே பி ஓய் பாலா ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். தனது சொந்த செலவிலே ஏழை மாணவ மாணவிகளின் கல்வி பொறுப்பை ஏற்றுள்ளார் சிலர் படிப்பதற்கான ஆதரவுகளையும் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு வருபவர்களின் கோரிக்கை நியாயமாக இருந்தால் உடனடியாக அவர்களுக்கு நேரில் சென்று உதவும் மனப்பான்மை உடையவர். அதுமட்டுமின்றி தனது சொந்த செலவிலே மலை கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸை சமீபத்தில் வழங்கினார். இவரது இந்த சேவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வருபவர் முதலில் தனக்கான வேண்டிய அனைத்தையும் சம்பாதித்துக் கொண்டு தனக்கு மீறியும் சேர்த்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இவர் அளவாக சம்பாதித்து அதில் சேர்த்து வைத்ததையே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார் என்ற பாராட்டுக்கள் கே பி ஓய் பாலாவிற்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அவர் மற்றுமொரு சேவையை தொடங்கி மக்கள் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது சென்னையை தாக்கிய மிக்ஜம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தெருக்கள் தோறும் வீடுகள் தோறும் வெள்ளமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற வேலையில் நிவாரண பொருட்களும் கிடைக்காமல் உணவும் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியுடன் காட்சிகள் செய்திகளாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த அவலத்தில் இருந்து மக்களை காப்பதற்கு சில தன்னார்வ தொண்டுகளும் அரசும் சில கட்சி நிர்வாகிகளும் முன்வந்து உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கே பி ஒய் பாலா பல்லாவரம், அனகாபுத்தூர் மற்றும் பம்மல் போன்ற பகுதிகளில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் இப்படி கிட்டத்தட்ட தன்னிடமிருந்து 2 லட்சம் ரூபாயை 200 குடும்பங்களுக்கு வழங்கி உதவி செய்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகை வழங்கியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது என்னை வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி தான் இது கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் பொழுதே உதவி செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது ஆனால் அப்பொழுது என்னிடம் பணம் இல்லை, ஆனால் தற்பொழுது என்னிடம் உள்ள பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவுகிறேன் என்று தன்மையாக கூறியுள்ளார். கோடி கோடியாக வாங்கும் பல பெரிய நடிகர்களே கப் சிப் என அமைதியாக இருக்கும் பொழுது தற்பொழுது பாலா செய்த உதவி பாராட்டைப் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்யும் நடிகர் என சமூக வலைதளத்தில் புகழப்படும் நடிகர் விஜய் உதவி செய்வோம் களமிறங்குவோம் என ஒரே ஒரு டிவிட்டை மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிய நிலையில் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து இல்லாத மக்களுக்கு பாலா உதவி வருவது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.