24 special

அவுரங்கசீப் கல்லறைக்கு சென்ற தலைவர்..! கிளம்பிய சர்ச்சை !

Aurangzeb's, Azaduddin
Aurangzeb's, Azaduddin

அவுரங்காபாத் : அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குல்தாபத் பகுதியில் அமைந்திருக்கும் அவுரங்கசீப்பின் கல்லறைக்கு AIMIM நிறுவனர் மற்றும் தலைவரான அசாதுதீன் ஒவைசியின் சகோதரரான அக்பருதீன் ஒவைசி  சென்று வணங்கினார். அது தற்போது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. சிவசேனா தலைவர்கள் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


அக்பருதீன் ஒவைசி அவுரங்காபாத்தில் நடந்த ஒரு பேரணியில் கலந்துகொண்டார். அதற்கு முன்தினம் அவுரங்கசீப் கல்லறைக்கு சென்று வணங்கினார். இதற்க்கு முன்னாள் சிவசேனா எம்பி சந்திரகாந்த் கைரே மற்றும் அவுரங்காபாத் மாவட்ட சிவசேனா தலைவரும் எம்.எல்.சியுமான அம்பாதாஸ் தன்வே ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

" அக்பருதீன் ஒவைசி  அவுரங்கசீப்பின் கல்லறைக்கு சென்ற  நோக்கத்தை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர் முன்பு கூறியிருந்த கருத்துக்கள் நினைவிருக்கிறது.( அவுரங்கசீப்பின் வழியில் காபிர்களை கொள்வோம் என்ற ரீதியில் முன்பு பேசியிருந்ததாக கூறப்படுகிறது) யாரும் அவுரங்கசீப் கல்லறைக்கு செல்வதில்லை. 

ஆனால் சமூகத்தில் பிரச்சினையை உருவாக்க அக்பருதீன் ஒவைசி செல்கிறார் என்றால் அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது" என சந்திரகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அம்பதாஸ் கூறுகையில் " அக்பருதீன் ஒவைசி அவுரங்கசீப்பின் சமாதிக்கு சென்றதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.நிஜாம் மற்றும் ரசாகர்கள் மற்றும் முந்தைய இஸ்லாமியர்களின் சிந்தனை ஒன்றுதான். அதன் வம்ச சித்தாந்தப்படி கல்லறைக்கு சென்றுள்ளார்.

தேச நலனை பற்றி சிந்திக்கும் இஸ்லாமியர்கள் AIMIM மற்றும் ஒவைசியிடம் இருந்து விலகியே இருக்கவேண்டும்" என கூறினார். AIMIM தலைவர் ஜலீல் கூறுகையில் குல்தாபாத்தில் பல கல்லறைகள் உள்ளன. இங்கு வரும் யாரும் அதை பார்வையிட செல்வார்கள். இந்த விஷயத்திற்கு வேறு வர்ணம் பூச வேண்டிய அவசியம் இல்லை" என கூறியுள்ளார்.