24 special

திமுக மூத்த தலைவர்களுக்குள் சலசலப்பு...! முதல்வர் மௌனம் ஏன்

Senthil balaji,mk stalin
Senthil balaji,mk stalin

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறிய விவகாரம் மூத்த திமுக அமைச்சர்களை கடுப்பாக்கி உள்ளது.  தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான அமைச்சராகவும் இருந்துவருகிறார்.


இதுமட்டுமில்லாமல் கடந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக வேலை பார்த்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. கடந்த வாரம் திமுக அமைச்சரவை மாற்றப்பட்டு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு சில அமைச்சர்களுக்கு புதிய இலாக்காக்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக அமைச்சரவை மாற்றத்திற்கு காரணமான அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது.

இப்படி திமுக ஆட்சி அமைந்து அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்படும் பல புகார்கள் வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி முதல்வர் ஸ்டாலின் எதுவும் பேசாமல் இருப்பதும், மேலும் முக்கியமான துறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்திருப்பதும் திமுகவினரை அதுவும் குறிப்பாக திமுகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று தலைமுறையாக அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்த அமைச்சரின் மேல் புகார் என்றவுடன் உடனடியாக அவரை பதவியில் இருந்து மாற்றினார் முதல்வர் ஆனால் செந்தில் பாலாஜியின் மீது ஆட்சிக்கு இவ்வளவு அவப்பெயர் ஏற்படுகிறது அவரை ஏன் மாற்றாமல் இருக்கிறார் என வெளிப்படையாகவே திமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது மட்டுமல்லாமல் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'செந்தில் பாலாஜியை சிஎம் தொட மாட்டேன் என்கிறார். அதற்கு என்ன காரணம் என்ன என தெரியவில்லை! மேலும் செந்தில் பாலாஜியை பற்றி மூத்த அமைச்சர்கள் சிலர் சி.எம்'மிடம் பேசுவதற்காக சென்றபோது 'செந்தில் பாலாஜியை பற்றி எதுவும் பேச வேண்டாம்' என கூறியுள்ளாராம் இதனால் மூத்த அமைச்சர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம். 'ஐந்து கட்சி மாறி திமுக'விற்கு வந்த செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு இடம் கொடுக்கிறாரே முதல்வர்?' என மூத்த அமைச்சர்கள் ரொம்பவும் கடுப்பில் இருக்கிறார்கள் என சவுக்கு சங்கர் கூறினார்.

மேலும் தற்பொழுது பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கும் விவகாரத்தில் செந்தில் பாலாஜி பத்திரிகையாளரிடம் ஆவேசம் அடைந்ததும் அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கப்படுகிறது என இணையதளவாசிகளால் பெருமளவில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதும் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாகவே அமைகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர் இவ்வளவு அவப்பெயர் ஏற்பட்டும் செந்தில் பாலாஜி மீது ஏன் கரிசனம் காட்டுகிறார் முதல்வர் நாளை பிரச்சனை என்று வெடித்தால் செந்தில் பாலாஜியால் தான் திமுகவிற்கு பிரச்சினை வெடிக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என இப்பொழுதே பல திமுகவின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றார்கள் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.