திமுக ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த சில சம்பவங்களின் விளைவாக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஆவடி நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் பிறகு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜ நிதியமைச்சர் துறையிலிருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டார் மற்றும் புதிய அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்பு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக புதிதாக பதவியேற்றார். அதேபோன்று தற்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பல செய்திகள் உலா வந்தன. ஆனால் அப்படி எந்த ஒரு துணை முதல்வர் பதவியும் புதிதாக திமுக அமைச்சரவையில் ஏற்படுத்தப்படவில்லை.
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பல துறைகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களையும் ஏன் காவல்துறை அதிகாரிகளை கூட பணியிடம் மாற்றம் செய்தார். அதே மாதிரி திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற சாதனையை விளக்க பல்வேறு மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்த பணியிட மாற்றங்களை தொடர்ந்து உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் ஒன்றும் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை கலந்த ஆலோசித்ததாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதி சிலையை நிறுவ உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றும் பொழுதே துணை முதல்வர் அமைச்சர் பதவி உருவாக்கலாம் என்று பேச்சுகள் அடிபட்ட நிலையில் தற்போது நடைபெற்ற உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்திலும் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்படி உருவாக்கப்படும் துணை முதல்வர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்திகளும் பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது வரை முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ள சில முக்கிய இடங்களுக்கு எல்லாம் அவரது மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்று வருகிறார்.
அப்படி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வருக்கு கொடுக்கப்படுகின்ற அதே பாதுகாப்பு மற்றும் மரியாதைகள் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் துணை முதல்வர் பதவியை கொண்டு வரலாமா என்று முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் கேட்டபொழுது துணை முதல்வர் பதவியா அதெல்லாம் வேண்டாம் என்று உடனடியாக மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் முதல்வரின் உடல்நிலை மற்றும் அவர் தற்போது மேற்கொள்ள இருக்கும் வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் துணை முதல்வர் பதவி அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாகவும் அதற்கு மூத்த தலைவர்கள் மறுத்துள்ளதாகவும் இதனால் வெளிநாட்டு பயணங்களை சென்று வந்த பிறகு இது பற்றி பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டால் அந்த பதவியில் உதயநிதி ஸ்டாலினே பொறுப்பேற்பார் ஏற்கனவே அவரின் மீது பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் உதயநிதி சொத்துக் குவிப்பு பற்றி பேசியிருந்தார் மேலும் இங்கு மொத்த கட்சியாக முதல்வரின் மகன் மற்றும் மருமகன்களை உள்ளனர் என்று பி டி ஆர் பேசியிருந்தது கட்சிக்குள்ளையே அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற விவகாரத்தின் காரணமாக உதயநிதி துணை முதல்வர் ஏற்றால் அது கட்சிக்கு கண்டிப்பாக அவப்பெயரை ஏற்படுத்தும் என மூத்த தலைவர்கள் நினைப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.