வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் உள்ள பிராமண சமூகத்தை சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் சமுகத்தில் அடையாளம் தெரிந்த நபர்களை கொண்டு பாஜக பிராமணர்களுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை உண்டாக்க சிலர் முனைவதாகவுபாஜகவிற்கு உள்ளே இருந்தே அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் செய்யவும் பாஜக பிராமணர்களுக்கு எதிரான கட்சி என கலகத்தை உண்டாக்க சிலர் முயன்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி மூலம் தன்னையும் அறியாமல் உளறி கொட்டி இருக்கிறார் நடிகர் எஸ் வி சேகர் இவர் தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் திமுகவுக்கு எதிராக குறைகளையே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? இவர் பாஜகவுக்கு என்ன செய்திருக்கிறார்.
அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது. நான் போனில் அப்பாயிண்மென்ட் கேட்டு அன்றைய தினம் போன் செய்தால் கூட எடுக்காதவர் அண்ணாமலை. மோடி, கலைஞர், ஜெயலலிதா ஆகியோரெல்லாம் என்னிடம் போனில் பேசியுள்ளனர். அவர்களைவிடவா அண்ணாமலை பெரிய ஆள்?
இவர் தோசை சுட வந்திருப்பதாக யாராவது நினைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் நான் அதற்காக வரவில்லை என உளறுகிறார். அண்ணாமலை இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. பிராமணர் அல்லாத தலைவர் என்பதாலேயே அண்ணாமலை கட்டம் கட்டப்படுகிறார் என்பது தவறான கருத்து. அவருக்கு பிராமணர்களை பிடிக்கவில்லை என்று கூட இருக்கலாமே. பிராமணர்கள் 3 சதவீதம் மட்டுமே இருந்தாலும் அவர்களை ஏன் கட்சியில் வளரவிடணும் என நினைக்கிறார் அண்ணாமலை
அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருக்கிறது. இது விரைவில் நிரூபணமாகும். தமிழகத்தில் பிராமணர்களுக்கென ஒரு கட்சியை தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இடஒதுக்கீட்டில் கூட பிராமணர்களுக்கு ஒன்றுமே இல்லை. பாஜக பிராமணர்களால் வளரப்பட்ட கட்சி. அதிகபட்ச வாக்கு வங்கியை பாஜகவுக்கு பிராமணர்கள் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் ஆடியோ, வீடியோ கலாச்சாரம் அசிங்கமாக இருக்கிறது. ஒருவருக்கு தெரியாமல் எடுக்கும் வீடியோ, ஆடியோவை வெளியிடுவது தவறு.
மத்திய அரசான நம்மிடம் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் இருக்கும் போது திமுக மீதான ஊழல் புகார்களை அங்கு போய் கொடுக்காமல் வீடியோ, ஆடியோவாக வெளியிட்டு என்ன பயன்? அண்ணாமலைக்கு டிஜிபியாகவாக இருந்தார். அவர் கர்நாடகாவில் அவரை போல 400 ரேங்க் அதிகாரிகளில் அவர் ஒருவர். பிஎல் சந்தோஷின் ஆதரவில் அவர் பாஜகவுக்கு வந்தார். தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு முதல்வராக அண்ணாமலைக்கு தகுதி இருப்பதாக சொன்னால் வார் ரூமில் எக்ஸ்ட்ரா பேமென்ட் என்று அர்த்தம்.
ஒருவரால் இரு வார்டுகளுக்கு கவுன்சிலராகக் கூட முடியாது. அப்படியிருக்கும் போது எப்படி இரு மாநிலங்களுக்கு முதல்வராக முடியும். இவர் நின்ற தேர்தலில் கூட தோற்றுவிட்டார். இதெல்லாம் முட்டாள்தனம். அண்ணாமலை நான் இருக்கும் இடத்தில் (பாஜக) இருக்கிறார், அதனால் விமர்சிக்கிறேன். ஒரு வேளை பிராமணர்களால் தொடங்க போகும் கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் பாஜகவிலிருந்து விலகுவேன். பிராமணர்களுக்கான கட்சியை தொடங்கி வாக்குகளை பிரிக்கலாமே என்று பேசி இருக்கிறார் eஎஸ் வி சேகர்.
இதன் மூலம் பாஜக தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான என்ற பிம்பத்தை உண்டாக்கி பிராமணர் சமுதாயத்தை அரசியல் அரங்கில் இருந்தே ஓரம் கட்ட திமுக உள்ளிட்ட இயக்கங்கள் செய்யும் செயல்களுக்கு எஸ் வி சேகர் போன்றோர் துணை போவதாக தற்போது விமர்சனம் எழுந்து இருக்கிறது.
இதே குற்றசாட்டை முன்வைத்து தமிழக பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் தற்போது அரசியலில் இருந்தே ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார். ஆனால் தொடர்ச்சியாக பாஜக மற்றும் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார், பல முறை பிராமணர்கள் மற்றும் இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சையாக பேசிவரும் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.
இந்த சூழலில் தான் பாஜகவிற்கு எதிராக பிராமணர்களை கொண்டு செல்லும் விதமாக பிராமணர்களுக்கு என்று தனி கட்சி என்ற அமைப்பை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தொடங்கி தொடர்ச்சியாக பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய சிலர் முயன்று வருகிறார்கள் என்ற குற்றசாட்டு எஸ் வி சேகர் உளறல் மூலம் வெளிவந்து இருக்கிறது.
பாஜக பிராமணர்களுக்கு எதிராக செயல்படும் கட்சி என சொல்லும் எஸ் வி சேகர் தொடர்ச்சியாக சிதம்பரம் தீட்சிதர்கள் பாதிக்கப்பட்ட போதும், தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்படும் நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? தனி கட்சி தொடங்குவது என்பதே பாஜகவிற்கு செல்லும் வாக்குகளை பிரித்து பாஜகவை தேர்தலில் வீழ்த்தும் முயற்சி என்றும்.. அதனை பாஜகவில் உள்ள எஸ் வி சேகர், முன்னாள் பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராம் இன்னும் பலரை கொண்டு திமுக தனது காய்களை நகர்த்துவதாக கூறப்பட்ட குற்றசாட்டு எஸ் வி சேகர் பேச்சின் மூலம் வெளிவந்து இருப்பதாக பலரும் கூற தொடங்கி இருக்கின்றனர்.