24 special

காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்கிறதா திமுக? தூத்துக்குடியில் என்ன நடந்தது???

mksalin
mksalin

காங்கிரஸ் தொண்டரை தண்டவாளத்தில் தள்ளிய தமிழக காவல் துறையினரால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சின் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தின் கோலார் பகுதியில் மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாட்டில் இருக்கும் எல்லா திருடர்களுக்கும் மோடியின் குடும்பப் பெயர் இருப்பது ஏன்??? என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதாக நினைத்து ஒட்டும் ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவதூறாக பேசியிருந்தார்.


 இதையடுத்து, குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி என்பவர் ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்திரவிட்டது. மேலும் அவருடைய லோக்சபா எம்பி பதவியையும் மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்தும் வயநாடு தொகுதியை காலியானதாகவும் அறிவித்தது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தி 8 ஆண்டுகள் வரை எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலையும் உருவானது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினரும்  கூட்டணி கட்சிகளும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு காரணம் பாஜக தான் என்று கூறி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  “இன்று தூத்துகுடி மாவட்டம் நாசரேத் பொரூராட்சியில் அமைந்திருக்கும் ரயில்வே தண்டவாளத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமர்தராஜ்  தலைமையில், மத்திய அரசை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அதிகளவு காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டதால் தமிழக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் தொண்டர் முதியவர் ஒருவரை, காவல் துறை அதிகாரி தண்டவாளத்தில் இருந்து கீழே தள்ளிவிடும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் திமுக அரசுக்கு அவர்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்”.

மேலும்,  “கூட்டணியில் இருக்கும் கட்சி என்று பார்க்காமல் இப்படி நடந்து கொள்ளும் திமுக அரசை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தும், இனி திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் தங்களுடையை கருத்தை தெரிவித்து வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது”. இந்நிலையில்,  ‘இதுபோன்ற சிறிய பிரச்சனைகளால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாலும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களின் மூலம் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உடைய அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் தெரிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்’.