பாஜக மாவட்ட தலைவராக இருந்த சரவணன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட காரணமாக சரவணன் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் திமுகவில் எம்எல்ஏ வாக இருந்த காலத்தை காட்டிலும் பாஜகவில் மாவட்ட தலைவராக இருந்த சரவணன் பிரபலமடைந்து காணப்பட்டார்.
அவரது செயல்பாடுகள் இன்று அவருக்கே எதிராக முடிந்து இருப்பதாக கூறப்படுகிறது, மாலை வரை திமுக அமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்த சரவணன் நள்ளிரவில் அவரை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியது இது தான் அரசியலா இவரெல்லாம் அரசியல்வாதியா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த சூழலில் சரவணன் பாஜகவில் செல்வாக்காக திகழ்ந்தாலும் திமுகவை கடுமையாக எதிர்த்த நிலையில் அவரது ரகசிய வீடியோவை வெளியிட்டு விடுவோம் என கொடுத்த எச்சரிக்கை காரணமாக சரவணன் மண்ணை கவ்வியதாக கூறப்படுகிறது, எங்களை எதிர்த்தால் உங்களது வீடியோவை ரிலீஸ் செய்து விடுவோம் என மிரட்டல் வந்த நிலையில் சரவணன் பெட்டி பாம்பாக அடங்கியதாக கூறப்படுகிறது.
அரசியலில் வீடியோவை வைத்து மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல அண்டை மாநிலமான கர்நாடகாவில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. சரவணன் அரசியலை கடந்து சினிமாவிலும் நடித்து இருக்கிறார், அதில் பல்வேறு நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
சரவணன் வீடியோவை வைத்து மிரட்டியதால்தான் திமுகவிற்கு மாறினார் என தகவல்கள் பரவி வருகின்றனவே தவிர, அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனினும் சரவணன் மூன்று மணி நேரத்தில் அரண்ட முகத்துடன் அமைச்சரை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க காரணம் என்ன என பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருவதை பார்க்க முடிகிறது.
இதற்கெல்லாம் விரைவில் சரவணன் முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது வீடியோ ஏதேனும் வெளியாகுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றன மதுரை வட்டாரங்கள்.