Cinema

குக் வித் கோமாளியின் பிரபலத்தின் காதல்!! யாராக இருக்கும்???

AMMU ABIRAMI
AMMU ABIRAMI

இன்று இருக்கும் இணையங்களின் மூலம்  சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் எந்த ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அது ரொம்பவே சீக்கிரமா எல்லா மக்கள்கிட்டயும் போய் சேர்ந்துவிடுகிறது. அதேபோலத்தான் அவங்க எது செய்தாலும் இந்த மூலமாகவே மாட்டிக்கிறாங்க. இதைத்தொடர்ந்து அவர்களைப் பற்றி பல கிசுகிசுக்கள் வேற நெட்டிசன்களால் பரப்பப்படும். நமக்கு பிடித்த திரை பிரபலங்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு அனைவரும் ஆர்வமாகவும் உள்ளனர். இது உண்மையாகவே இல்லாவிட்டாலும் அந்த பிரபலங்கள் இது போன்று தங்களை பற்றி பரவி இருப்பதை தெரிந்து அவர்களுக்கும் ஒரு ஆசை உருவாகி அதை உண்மையாகவும் ஆக்கும் பிரபலங்களும் இன்று உள்ளனர். இது போலவே தற்போது இன்னொரு பிரபலமும் கிசுகிசுக்களில் மாட்டியுள்ளார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா??


ஆம்! அது நம்ம அம்மு அபிராமி தான்!! சினிமாவில் ஆரம்பத்தில் பள்ளியில் படிக்கும் பெண்ணாக நிறைய படங்களில் நடித்து வந்தார். அதன்பின் தற்போது வளர்ந்து வரும் நடிகையாகவும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழில் ராட்சசன் என்னும் திரைப்படத்தில் பள்ளியில் படிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து  இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய பேருக்கு இவரை தெரிய ஆரம்பித்தது. இந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் அம்மு என்பதால், தற்போது வரை இவர் அம்மு அபிராமி என்று அழைக்கப்படுகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு பைரவர் படத்தில் நடித்திருந்தார் ஆனால் அதில் பெரிய வரவேற்பு எதுவும் இல்லை. அதன் பிறகு தான் ராட்சசன்  தமிழ் திரைப்படத்தில் நடித்தார் அதன்பின் மிகவும் பிரபலமாக ஆனார், அதோடு பெரும் ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார்!! அதன்பின் தனுசுடன் சேர்ந்து அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றதை ஒட்டி இவரது instagram அக்கவுண்டில் பல ரசிகர்கள் குவிந்தனர். 

மேலும் என் ஆளோட செருப்ப காணோம், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர் 2022 ஆம் ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் குக் வித் -3 கோமாளி என்னும் நிகழ்ச்சியில் ஒரு குக்காக வந்திருந்தார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி என்றாலும் அது மிகவும் பார்ப்பவர்களே சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகும். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருந்தனர். இதனை பார்ப்பவர்களுக்கு எந்த கவலைகள் இருந்தாலும் அதனை மறந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி ஒரு டிரஸ் பஸ்டர்  ஆகவே இருந்தது. இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3ல் பங்கேற்ற அம்மு அபிராமி மிகவும் அருமையாக அதில் சமைத்து செகண்ட் ரன்னராகவும் வந்திருந்தார். இந்த நிலையில் சீசன் 1-ல் இருந்து 4 வரை இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்த பார்த்தீவ் மணியை அபிராமி காதலித்து வருவதாக ஒரு புரளி கிளம்பி உள்ளது.

ஏனென்றால் மார்ச் 16ஆம் தேதி அம்மு அபிராமி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார், அதில் பார்த்தீவ் மணி அபிராமி உடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு அதில் உன்னைப் போன்ற இனிமையான ஆன்மாவுக்காக, புன்னகை நிறைந்த முகங்கள் பலர் ஒன்று கூடி உன்னை வாழ்த்துகிறார்கள். ஹாப்பி பர்த்டே அபிராமி.எப்போதும் சந்தோஷமாக இரு என்று அபிராமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு விஜய் டிவியில் உள்ள பல பிரபலங்கள் கமெண்ட்ஸ்களை தட்டி விட்டுள்ளனர். ஒருவேளை அப்படித்தானோ! இதனை பார்க்கும்போது ஒருவேளை இவர்கள் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை முன்வைத்த வகையில் விஜய் டிவியின் பிரபலங்கள் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவையே கேள்வி எழுப்ப வைத்துள்ளது!