
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றாத நிலையில்,பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . இதனையடுத்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் 10 பேருடன் சென்று திருப்பரங்குன்றம் மலையில் உடன் சென்று தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.அதையும் தடுத்தது திமுக அரசு.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டு இருந்தார். இதனை எதிர்த்து அறநிலைய துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மலை உச்சியில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் பிற பகுதிகளை போல பழைய தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவை நிறைவேற்றவில்லை என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மதுரை திருப்புரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை தீரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பிரவின் குமார் அறிவித்தார் .நீதிமன்ற உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸ் கமிஷனர் கூறினார்.
இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.ஒரு கோவிலின் பரம்பரியத்தை காக்க வேண்டிய நிர்வாகமே அந்த பாரம்பரியத்துக்கு எதிராக நிற்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நேற்றே ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத அரசு ஏன் இருக்க வேண்டும், இந்து அறநிலையத்துறை கோவிலுக்கு எதிராக ஏன் நிற்க வேண்டும், யாருக்கு சாதகமா செயல்படுகிறது இந்த அரசு, இதே போல் தானே இந்துக்கள் விஷயத்திலும் அவர்கள் பாரம்பரிய விஷயத்தில் திமுக அரசு செயல்படும் என வெட்டவெளிச்சமாகிறது. எனவே இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது .
