திமுக தமிழகத்தில் ஆட்சியை ஏற்றுக் கொண்டு திமுகவின் முக்கிய அமைச்சராகவும் அதிக அதிகாரத்தை கொண்ட நிர்வாகியாகவும் அறிவாலயத்தில் உள்ள மூத்த தலைவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலும் தலைமையிடம் அதிக நெருக்கம் காட்டி வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்திலும் அதிகாரத்தில் இருந்தார் அதற்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பொழுதும் திமுகவில் இணைந்து அப்பொழுதும் அதிகாரத்தில் இருந்தார் எந்த ஆட்சியிலும் செம கெத்தாக தான் இவர் வாழ்கிறார் என பல பேச்சுகள் இவரை சுற்றி இருந்தது அந்த பேச்சுகள்தான் இவருக்கு கண்ணாக மாறியதா என்று தெரியவில்லை கடந்த ஆண்டு மே 26 ஆம் தேதியிலிருந்து தொடங்கியது கெட்ட நேரம், செந்தில் பாலாஜி தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அன்றைய தினம் திடீர் சோதனைகள் ஈடுபட்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்.
அதற்கு பிறகு அமலாக்க துறையின் சோதனை வருமானவரித்துறையின் சோதனை என தொடர் சோதனைகளால் தனது சோகத்தை மறைத்து வாழ்ந்து வந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செய்த மோசடி வழக்கில் கைது செய்தது. அந்த கைதியின் பொழுது நெஞ்சு வலி மருத்துவமனையில் சேர்த்து மற்றும் அறுவை சிகிச்சை, அதற்குப் பிறகான சிகிச்சைகள், மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் என பலவற்றால் தனது உடலை இழந்த செந்தில் பாலாஜி சிறைவாசத்தில் மனதளவில் நொந்து போய் உள்ளார். ஏனென்றால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீனுக்காக பல நீதிமன்றங்களை ஏறி இறங்க ஜாமினும் பெற முடியாமல் அமலாக துறையின் வாதத்திற்கு தகுந்த பலமான வாதத்தை திமுகவின் வழக்கறிஞர்களால் முன்வைக்கப்படாமல் பிறகு கட்சியால் மறக்கப்பட்ட ஊதியம் மட்டும் வாங்கி வந்த அமைச்சராக இருந்து வந்தார். அதற்கு பெருமளவிலான சர்ச்சைகள் ஏற்பட தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி இழுத்தடிக்க போகிறீர்கள் என்று செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற விசாரணையில் காட்டமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது செந்தில் பாலாஜியின் ஜாமின் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி அபய் எஸ் ஓஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது, இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெறுப்படைந்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஓராண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமலாக்கத்துறை வேண்டுமென்றே இதில் காலம் தாழ்த்தி வருகிறது, இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இந்த வழக்கை தள்ளி வைக்க போகிறீர்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த ஜாமின் மீதான வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு தள்ளி வைத்துள்ளனர்.
அதாவது ஏற்கனவே செந்தில் பாலாஜி ஜாமனில் வெளியே வந்தால் முக்கிய ஆதாரங்களை அவர் அளிக்க கூடும் எனவும் இவருக்கு பின்னால் உள்ள பல அமைச்சர்கள் சுதாரித்துக் கொள்வார்கள் என்பதாலும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் வழக்கில் மிகத் திட்டவட்டமாக இருந்து வருவதாலே செந்தில் பாலாஜி வழக்கில் இவ்வளவு கண்டிப்புடன் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பு தற்போது முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை எனவும் சில அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.. இருந்த வரைக்கும் என் புருஷனை உபயோகப்படுத்திக்கிட்டாங்க ஆனா இப்போ அவரை யாருமே கண்டுக்கல எனவேறு செந்தில்பாலாஜியின் மனைவி புலம்பி வருவதாகவும் கரூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன....