
இன்றைய உலகத்தில் நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலுமே கலப்படம் என்பது நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது. வீட்டின் பயன்பாட்டிற்காக வாங்கும் பொருள்களில் தொடங்கி உண்ணும் உணவுப் பொருட்கள் வரைக்கும் அனைத்துலுமே கலப்படம் என்பது இருந்து வருகிறது. பயன்படுத்தும் பொருள்களில் ஏதாவது கலப்படம் செய்திருந்தால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு சில நேரங்களில் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது. உதாரணமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்களில் ஏதேனும் கலப்படம் இருந்தால் அவை திடீரென்று வெடித்து அங்கு இருக்கும் உயிருக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து விடுகிறது.