பொதுவாக வசதி படைத்த வீடுகளில் ஒவ்வொரு வேலையை பார்ப்பதற்கு ஒவ்வொரு வேலை ஆட்களை நியமித்திருப்பார்கள். மேலும் அவர்களை எப்பொழுதுமே அவர்கள் தங்களுடனே தங்கும்படி செய்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் சில பணிப்பெண்கள் தான் அந்த வசதி படைத்த குடும்பத்தினரால் பெரும் அவதிகளை பெறுகிறார்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது ஆனால் தற்பொழுது ஒரு நடிகையின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டு 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஒரு பெண் தொடர்ச்சியாக தனது திருட்டு கை வரிசையை அந்த வீட்டில் காட்டி வந்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ஷார்ட் பிலிம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் அதுல்யா ரவி. அதிலும் இவர் முதன் முதலில் நடித்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் இலசுகளை பெருமளவில் கவர்ந்திழுத்தது. இதற்குப் பிறகு சாட்டை கேப்மாரி போன்ற படங்களில் நடித்தார். முன்னதாக கேப்மாரி படத்தில் ஒரு கவர்ச்சிகரமான நடிகையாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்அதுல்யா. இதனை தொடர்ந்து இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் இந்த படத்திலும் தனது கிளாமரை தூக்கி காட்டிய அதுல்யா குறிப்பிடத்தக்க வரவேற்பை மட்டுமே பெற்றார்.
இதற்குப் பிறகு வட்டம் மற்றும் கடாவர் போன்ற படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த அதுல்யா ரவி தற்பொழுது பெருதளவிலான பட வாய்ப்புகள் இல்லாமல், சமூக வலைதளங்களில் புதுப்புது போட்டோ சூட்டுகளை எடுத்து அதனை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் கோவை வடவள்ளி பகுதியில் தனது தாயார் விஜயலட்சுமிவுடன் வசித்து வருகின்ற அதுல்யா அவ்வப்போது சென்னைக்கும் சென்று வந்துள்ளார் அதுல்யா செல்லும் பொழுது அவருடைய தாயார் விஜயலட்சுமி உடன் சென்று வருவதால் சில நேரங்களில் கோவை வடவள்ளியில் உள்ள அதுல்யா வீடு ஆள் நடமாட்டம் இல்லாமலே இருந்து வந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் செல்வி என்ற ஒரு பெண் நீண்ட காலமாகவே பணி பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் நகைகள் திருட்டுப் போவதை உணர்ந்த விஜயலட்சுமி யார் திட்டுகிறார் என்பது குறித்து தெரியாமல் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு அதுல்யா, தனது வீட்டு சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். இதனை அடுத்தும் அவரது வீட்டில் திருடு நடைபெற்றுள்ளது.
அந்தத் திருட்டு சிறிதளவு பணம் மற்றும் அதுல்யாவின் பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை அதுல்யா வீட்டார் சோதித்துப் பார்த்ததில் 25 ஆண்டுகளாக தனது வீட்டில் வேலை பார்த்து வந்த செல்வி என்ற பணிப்பெண் தான் இந்த திருட்டு வேளையில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் அதுல்யா புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் பணிப்பெண் செல்வி மற்றும் அவரது தோழியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் பணம் மற்றும் நகைகளை அதிகமாக எடுத்தால் தெரிந்து விடும் அதனால் சிறிது சிறிதாக எடுத்ததாகவும் பாஸ்போர்ட்டை தெரியாமலே எடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது மட்டுமின்றி ஒரு நடிகையின் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் அந்த வீட்டிலே 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஒரு பணிப்பெண் தற்போது மாட்டியுள்ள சம்பவம் பல வசதி படைத்த வீடுகளையும் அதிர்ச்சி அடைய செய்கிறது.