தமிழ் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழகத்தில் அதிக ரசிகர்கள் செல்வாக்கை பெற்றவர். ஆரம்பத்தில் கிடைத்த படங்கள் அனைத்திலும் நடித்த இவர் தற்பொழுது பெண்களை மையப்படுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்த வருகிறார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து கொண்ட நயன்தாராவிற்கு ரெட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்ததால் அந்த சமயத்தில் நயன்தாரா பல விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு முன்பாகவும் விமர்சனத்திற்கும் இவருக்கும் பத்துக்கு பத்து பொருத்தம் என்பது போன்றே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை! ஒரு பக்கம் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நயன்தாரா அதில் சம்பாதித்த பணத்தை வேறு வணிகங்களில் முதலீடு செய்து வருகிறார். அதாவது இந்த ஆண்டில் முதலில் 9 ஸ்கின் என்கின்ற அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். இரண்டாவதாக விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் அவர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் டுவைன் புட்ஸ் என்கின்ற நிறுவனத்திலும் பங்குதாரராக இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பெமி9 என்கின்ற நாப்கின் பிராண்டையும் தொடங்கி மூன்று வணிகங்களை தன்னகம் வைத்துள்ளார். சினிமாவின் நன்கு சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற வேலையில் பிசினஸை தொடங்கியுள்ள நயன்தாராவிற்கு பாராட்டுகளும் உங்களை மாதிரி சேவ் பண்ணி பிசினஸ் செய்யணும் என்கின்ற முன்மாதிரிகளை படைத்து வரும் நயன்தாரா தற்போது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளார்.
அதாவது சென்னை முழுவதும் கடும் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை நின்ற பிறகும் மழை நீர் வடியாமல் மக்கள் வேதனையில் உள்ள காட்சிகள் செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இன்னும் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கும் பணிகளில் சில தன்னார்வ தொண்டுகளும் சில தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன அந்த வகையில் நயன்தாராவின் பெமி நைன் நிறுவனம் வேளச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர் மற்றும் நாப்கின்களை இலவசமாக வழங்கியுள்ளது.நிவாரண பொருட்களை வழங்கிய பின்பு பெமி 9 பிராண்டை பிரபலப்படுத்தும் நோக்கில் பெண்களை மட்டும் குழுவாக நிற்க வைத்து நயன்தாராவின் பெமி 9 நாப்கின்னை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டோ ஒன்றை எடுத்து அதனை வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.
இதற்கு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்கள் பறந்துள்ளது. அதாவது அவசர காலத்திலும் பிசினஸ் தேவைதானா? பிசினஸ்க்கு தான் முக்கியத்துவம் கொடுப்பீர்களா என்பது போன்ற விமர்சனங்கள் தற்பொழுது முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்கள் பால் பாக்கெட் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, தங்குவதற்கு இடமில்லை, மழைநீர் விடியவில்லை என மக்கள் அவதிப்படும் வேளையில் இந்த நயன்தாரா மக்களின் இந்த அவஸ்தையை வியாபாரமாக்குவது என்ன மாதிரியான மனநிலை என விமர்சனங்கள் அதிகம் எழுந்துள்ளது. இதற்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஒரு பிலிம் ஃபெஸ்டிவலுக்கு டிக்கெட் விற்பனை செய்யும் விளம்பரத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கான விமர்சனங்களை அவர் சந்தித்து வருகின்ற நிலையில் தற்பொழுது முன்னணி நடிகையும் விளம்பரம் செய்திருப்பது கண்டனங்களை பெற்றுள்ளது.