கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையை கடந்து சென்ற மிக்ஜம் புயலால் சென்னை மக்கள் தனது அன்றாட வாழ்க்கை நிலையை இழந்ததோடு அத்தியாவசிய பொருள்களும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புயலால் ஏற்பட்ட கோரதாண்டவத்தால் பெய்த மழை வீட்டுக்குள் வெள்ளம் புகுற காரணமாக அமைந்தது. இதனால் தெருக்கள் தோறும் வீடுகள் தோறும் மழை நீர் வெள்ளமாக தேங்கி உள்ளது. வெள்ளம் வந்து ஐந்து நாட்கள் முடிந்தும் மழை நீர் படியாதது பெரும்பாலான பகுதிகளின் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நிவாரண பொருட்களும் கிடைக்காமல் கிடைத்த பொருட்களும் சரிவர இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களை காணவரும் தமிழக அரசின் அமைச்சர்களிடம் மக்கள் முறையிட்டும் அவர்களை மரித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வெள்ளத்தால் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் வீட்டுக்குள்ளே அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் மீட்கும் பணியில் தற்பொழுது பல தரப்பினர் இறங்கி உள்ளதும் குறிப்பிடப்பட்டது. தமிழ் திரை உலக நடிகை நடிகர்கள் சமூக வலைதள பக்கம் மூலம் தங்களால் இயன்ற உதவிகளையும் தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தனது அமைப்பை களத்தில் இறங்கி வேலை பார்க்கும் படி அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து சமூக போராளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்கு பெற்று பிரபலங்களாக உள்ள கே பி ஒய் பாலா தன்னிடமிருந்த இரண்டு லட்சம் ரூபாயை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1000 என 200 குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். அவரது வரிசையில் அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
மேலும் இயக்குனர் பார்த்திபன், நடன இயக்குனர் கலா மாஸ்டர் என ஏராளமானோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இவர்களை தவிர நடிகர் சாந்தனு, ஆர் ஜே விஜய், விஜே அர்ச்சனா துணிவு பட நடிகர் வீரா மற்றும் ஜெயிலே படத்தின் நடிகை மிர்னா போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து தங்களால் இயன்ற உதவிகளை ஆற்றி வருகின்றனர். இப்படி சென்னை மக்களும் சென்னை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் புயலில் ஜாலியாக ஆட்டம் போட்டு ரிலீஸ் எடுத்து பதிவிட்டுள்ளார் நடிகை ஷிவானி.
அதாவது சென்னையை புயல் கடந்து கொண்டிருக்கும் பொழுது பெய்த மழையில் ஜாலியாக நடனமாடி எடுத்த ரீல்சை நேற்று முன்தினம் ஷிவானி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவிற்கே பல நெகடிவ் கமெண்ட்கள் வந்தது. மக்கள் உண்ண உணவு இன்றி நீரும் இன்றி தவித்து வருகிறார்கள் உங்களுக்கு ஆட்டம் கேட்கிறதா அல்லது இது போன்ற பதிவு இப்பொழுது தேவைதானா என்பது போன்ற கமெண்ட்டுகள் பறந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவை நடிகை ஷிவானி பதிவிட்டு மேலும் விமர்சனங்களை பெற்று வருகிறார். அதோடு உங்களால் மற்றவருக்கு பேரிடர் காலங்களில் உதவ முடியவில்லை என்றால் இது போன்ற வீடியோக்கள் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் நடிகை ஷிவானிக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர். விஜய் டிவியின் மூலம் பிரபலமான கே பி ஒய் பாலா மக்களுக்கு தொண்டாற்றும் பணியில் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் அதே விஜய் டிவியின் மூலம் ஒளிபரப்பாகப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஷிவானி இப்படி செய்யலாமா என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.