24 special

பாஜகவை ஓட ஓட விரட்டுவோம் என்று சொன்ன செந்தில் பாலாஜியா இது...?பல வேஷம் போடுறாரே

Annamalai, senthil balaji
Annamalai, senthil balaji

செந்தில் பாலாஜியை 8 நாட்கள்  அமலாக்காதுறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுடன் அமலாக்கதுறை அதிகாரிகள் காவேரி மருத்துவமனை சென்ற  நிலையில் அங்கு செந்தில் பாலாஜி அந்நியனாக மாறிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.பெயரை கூட சொல்ல முடியாத நிலையில் செந்தில் பாலாஜி சைகை கொடுக்க, இது போல் எத்தனை நபர்களை விசாரணை செய்து இருப்போம் என அமலாக்க துறை தங்களுக்கு உரிய பாணியில் ஷாக் கொடுத்து இருக்கிறார்கள்.


சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இந்தநிலையில், அவர் வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பகிர்ந்தளித்து உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தவறானது என்று திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது.அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை ஒதுக்க ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி கிரிமினல் வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு நீதிமன்ற காவலில் உள்ளதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்தநிலையில், தமிழக அரசு நேற்ற செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கியும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் அரசாணை பிறப்பித்தது.இவை ஒருபுறம் அரங்கேறி கொண்டு இருக்க செந்தில் பாலாஜியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் கஷ்டடி எடுத்த விவரத்தை கூறி கையெழுத்து போட கேட்டு இருக்கிறார்கள், பல முறை அதிகாரிகள் கேட்ட நிலையில் செந்தில் பாலாஜி கண்களை கூட திறக்கவில்லையாம் அவரால் கையெழுத்து கூட போட முடியாத நிலையில் இருப்பதாக செந்தில் பாலாஜி கண்களை மூடி இருந்து இருக்கிறார்.

என்னடா இது முதல்வர் வந்த போது எழுந்து உட்கார்ந்து பேசியவர், அதன் பிறகு காவேரி மருத்துவமனை மாறும் போது சற்று நிதானமாக இருந்தவர் இப்போது அந்நியன் படத்தில் விக்ரம் போடும் கெட்டப் போன்று ஆக்ட் கொடுக்கிறாரே என சற்று யோசனை செய்து இருக்கிறார்கள்.

இதையடுத்து செந்தில் பாலாஜி உடலை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு உடனடியாக பரிசோதனை செய்யவும், அதன் பிறகு செந்தில் பாலாஜியை நேரடியாக டெல்லி அழைத்து செல்லவும் தயாராகி இருக்கிறதாம் அமலாக்கதுறை, எத்தனை நாட்கள் தான் உடல்நிலையை காரணம் காட்டி தப்ப முடியும் இன்னும் அதிகபட்சமாக 15 நாட்கள் செந்தில் பாலாஜியால் உடல் நிலையை காரணம் காட்டி தப்பிக்க முடியும்.

மேலும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் பதிவு செய்து தமிழகத்தில் இருந்தால் வழக்கு விசாரணை முழுமை அடையாது எனவே செந்தில் பாலாஜியை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என புதிய மனுவை நீதிமன்றத்தில் பதிவு செய்ய அமலாக்கதுறை ரெடி ஆகி இருக்கிறதாம்.

இந்த தகவல் தற்போது செந்தில் பாலாஜிக்கு தெரியவர என்ன செய்வது என்று ஷாக் அடித்தது போன்று உறைந்து இருக்கிறதாம் செந்தில் பாலாஜி தரப்பு.பாஜகவை ஓட ஓட விரட்டுவோம் என பேசிய செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் பல வேஷங்கள் போடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.