மே மாத வெறியில விட செம்ம ஹாட்டாக மாறி உள்ள தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி அரசியல் வாதிகளின் வாக்குவாதமும்... சண்டை சச்சரவுகளும்....இருக்கும் அதே சமயத்தில், மறந்து போகும் சில விஷயத்தை கூடதோண்டி எடுப்பதில் இப்ப இயக்குனர் பேரரசு ஒருபடி முன்னாடி சென்று இருக்காரு ..
செநதில் பாலாஜி கைது ஆளும் திமுக வை கொந்தளிக்க வைத்து இருக்கு.... அதன் வெளிப்பாடாக வே... துறை சார்நத அமைச்சர்களான ரகுபதி... கே என் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்களும்.... ஆர் எஸ் பாரதி, சபரீசன் , உதயநிதி என ஒட்டு மொத்த திமுக புலிகளும் டான்னு ஸ்பாட்டுக்கு சென்று செந்தில் பாலாஜியை சந்தித்தனர். அவ்வளவு ஏன்.....முதல்வர் அவர்களும் செந்தில் பாலாஜியின் கைதுக்கு கடும் கண்டனத்தை பதிவிட்டு... எங்களை சீண்டி பார்க்க வேண்டாம் என பேசி பாஜகவிற்கு எச்சரிக்கை பதிவை போட்டு இருந்தார்.
ஆளுங்கட்சி அமைச்சரையே கைது செய்து விட்டார்களே என்ற டென்க்ஷனில் திமுக ஒரு பக்கம் இருக்கும் அதே சமயத்தில்.... தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் இவிகேஎஸ் இளங்கோவனை வம்புக்கு இழுத்து உள்ளார் இயக்குனர் பேரரசு. அட என்னடா இது சம்மந்தமே இல்லாம...இந்த விஷயத்தில் அவரை போயிட்டு வம்புக்கு இழுக்குறாரே இயக்குனர் பேரரசு ன்னு பார்த்தல்.. அவருடைய ட்விட்டேர் பதிவுல....செந்தில் பாலாஜி கைதுக்கு திமுக எதிர்ப்பாளர் சீமான் அவர்களே...தன் கருத்தை தெரிவித்து இருக்கிறார். செந்திபாலாஜியால் வெற்றி பெற்ற இவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் சவுண்டையே காணோமே ? என்ன விசுவாசம்..!!! என பதிவிட்டு உள்ளது சமுக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.
அதாவது..... ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலின் போது, திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவியதால் ...எப்பேர்பட்டாவது அதிமுகவை அங்கு வெற்றி பெற செய்யக்கூடாது என்பதில் திமுக தீயாய் வேலை செய்தது....அப்போதைய நேரங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவங்கப்பா.... பரிசு பொருட்களும் கிடைக்கிறது என்னவெல்லாம் சொல்லி கிண்டலாக மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வந்தாங்க ... இதை யாரும் மறந்திருக்க முடியாது...இன்னும்சொல்லபோனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தான் ஈரோடு கிழக்கில் நின்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்ற இவிகேஎஸ் - கு ஆதரவாக அன்றைய தினங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் evks கு ஆதரவாக இருந்து இருக்காங்க.
ஆனால் திமுகவோ....அதிமுகவுக்கு எதிராக தன் கூட்டணி கட்சி வேட்பாளர் evks வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் மும்முரமாக இறங்கி செயல்பட்டவர் என்றால் அது செந்தில் பாலாஜி தான் என்பதில் எந்த மாற்று கருத தும் கிடையாது என்கின்றனர் மக்கள்.... மற்றஅமைச்சர்கள் அமர்ந்துகொன்டு ஆதரவு தெரிவித்தால்..
தெருவுக்கு தெரு தன் சட்டை பாக்கெட்டை பிடித்துக்கொண்டு ஓடோடி சென்று evks காக மக்களிடம் ஆதரவு கோரினார் செந்தில் பாலாஜி. இப்படி தீயாய் வேலை செய்த evks அவர்களை வெற்றி பெற செய்த செந்தில் பாலாஜிக்காக .... தினம் தினம் திமுகவை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் கூட தன் கருத்தை பதிவிட்டுட்டாரு,.. ஆனால்... தன்னுடைய வெற்றிக்கு ஓடாய் உழைத்த செந்தில்பாலாஜி கைதுக்கு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதால்.... என்ன சவுண்டையே காணோமே என வடிவேலு பாணியில் EVKS க்கு கிண்டலாக கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல்.... என்ன விசுவாசம் ..! என ஒரு ஆச்சர்ய குறியும் போட்டு...பதிவு செய்துள்ளார் இயக்குனர் பேரரசு.ஊரே செந்தில் பாலாஜி கைது பற்றி மட்டும் பேசும் போது இயக்குனர் பேரரசு இப்படி ஒரு ட்வீட் போட்டு இருப்பதை பார்த்து "என்ன சந்துல சிந்து பாடுறாரே" பேரரசு என விமர்சிக்க தொடங்கி இருக்காங்க.