24 special

பதிலடி கொடுப்பதாக நினைத்து வம்பை விலைக்கு வாங்கி கொண்ட திமுக...!

Sg Surya,mk stalin
Sg Surya,mk stalin

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைதுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் தமிழக பாஜக செயலாளர் SG சூர்யாவை கைது செய்து அறிவாலயம் பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது. 


கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தமிழக முக்கிய அமைச்சராக வலம் வரும் செந்தில் பாலாஜியை பண மோசடி விவகாரத்தில் கைது செய்தது, தற்பொழுது காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சை முடிந்தவுடன் அமலாக்கத்துறை அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை தொடங்க இருக்கிறது. மேலும் செந்தில் பாலாஜி  தம்பி அசோக்கை  தேடி வருகிறது அமலாக்கத்துறை. அசோக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது இன்னும் 4 தினங்களில் அசோக் ஆஜராகபட்சத்தில் அசோக்கை கைதுசெய்ய அமலாக்கத்துறை தயாராகிவிட்டது. இதன் காரணமாக அசோக் தற்போது தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் இது எச்சரிக்கை என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அண்ணா மலையும் ஒரு முதல்வர் இப்படி பேசுவது அழகல்ல என கூறினார். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில செயலாளர் SG  சூர்யா காவல்துறையால் அதிரடியாக அவரது இல்லத்தில் இரவு 11 மணி அளவில் கைது செய்யப்பட்டார். 

கடந்த 7ம்  தேதி அவரது சமூக வலைதள பதிவு ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம் பி வெங்கடேசன் அவரை குறிப்பிட்டு கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரால் நடந்த தூய்மை பணியாளர் மரணத்தை கேள்வி எழுப்பி உங்கள் கட்சியின் கவுன்சிலரால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள்! மோடி அரசு எது செய்தாலும் உடனே குரல் எழுப்பும் நீங்கள்! ஏன் இதற்கு வாய் திறக்காமல் இருக்கிறீர்கள்! என்கின்ற ரீதியில் கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த பதிவை மையமாக வைத்து மதுரையில் புகார் பதிவு செய்து வெள்ளியன்று இரவு 11 மணிக்கு அவர் வீட்டில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது, இதன் காரணமாக தமிழக பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தொட்டுடீங்க இனி நாங்க விடமாட்டோம் எனவும் ஆவேசமாக பேசியிருந்தார்.

மேலும் தென்னிந்திய அமைப்பு செயலாளர் பி எல் சந்தோஷ் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் தங்களது கண்டனங்களை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். 

மேலும் இந்த விவகாரம் தற்போது டெல்லி பாஜக வரை சென்றுள்ளது டெல்லி பாஜகவில் தேசிய செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் இது குறித்து நேஷனல் மீடியாவில் செய்தி வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் நடந்த ஒரு விவகாரத்தை வைத்து கேள்வி எழுப்பியதற்காக SG  சூர்யா மேல் நடவடிக்கை எடுத்து தற்போது அது திமுகவிற்கு எதிராக திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவினர் மீது கை வைத்தால் சும்மா விட மாட்டேன் எனக் கூறி பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததன் விளைவு தற்போது திமுகவிற்கு எதிராக தேசிய அளவில் வெடித்துள்ளது.