24 special

மின் கட்டண உயர்வால் கதறும் மக்கள்.,.. பறந்த ரிப்போர்ட்டால் அறிவாலயம் செய்த காரியம்....

mkstalin
mkstalin

சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ள மாநிலம் என்ற வரிசையில் தற்போது ஏதேனும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டால் அதில் தமிழகம் தான் முதலிடத்தை பிடிக்கும் அந்த வகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் சந்து சிரித்து கொண்டிருக்கிறது என விமர்சங்கள் எழுந்துள்ளது.. தேர்தலின் பொழுது ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு என்று திமுக பிரம்மாண்டமான பாடல்களை எல்லாம் அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது ஆனால் விடியலும் தரவில்லை மேலும் மேலும் இருட்டிற்க்கு தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்படுகிறது. 


ஏனென்றால் முன் இருந்த ஆட்சிக்காலத்தை விட படுமோசமான ஆட்சி காலத்திற்கு தான் தற்போது தமிழகம் செல்கிறது முதலில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய திமுக மக்களை ஏமாற்றியது அதில் ஏமாற்றப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மக்கள் அனைவரும் போராடத் தெம்பு இல்லாமல் அமைதியாகினர். தங்களின் வாக்குகள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனை அடுத்து மகளிருக்கான உரிமைத்தொகை என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதில் பல வரையறைகளை வகுத்து விட்டு பல மகளிர்களை ஏமாற்றி பெரும் திண்டாட்டத்தில் அவர்களை தள்ளினர். இது குறித்து லோக்சபா தேர்தலின் பிரச்சாரத்தில் முதல்வரிடம் குடும்பத்தலைவி ஒருவர் தனது ஆதங்கத்தை கேள்வியாக முன் வைத்திருந்தார். 

இதனை அடுத்து தொடர்ச்சியாக தமிழகம் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா புழக்கத்தில் குடோனாக மாறி வருகிறது தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா பொருள்களின் விற்பனை கைமாற்ற அதிகமாக நடைபெறும் சம்பவங்களும் வெளியாகி வருகிறது. இது போதாது என்று கள்ளச்சாராய விற்பனை டாஸ்மார்க் விற்பனைய அனைத்து விற்பனையிலும் திமுக கல்லாகட்டி வருகிறது. அதே சமயத்தில் மின் கட்டணம் படு வேகத்தில் உயர்ந்து மக்கள் அனைவரையும் ஷாக் அடிக்க வைத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 100 ரூபாய் இலவச யூனிட்டுக்குள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று பல வாக்குறுதிகளை கூறியது திமுக அவற்றிற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் மின்கட்டணம் உயர்த்திக்கொண்டு செல்கிறது கேட்டால் மின்சார துறை நட்டத்தில் செல்கிறதாகவும் கூறுகிறது. 

இப்பொழுது கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒவ்வொரு பிரச்சனைகள் தான் இன்னும் குறிப்பிட முடியாத பல பிரச்சனைகள் உள்ளது இவற்றையெல்லாம் கண்ட மக்கள் தங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் 2026 பொது தேர்தல் வெளிப்படுத்துவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறிய வருகின்றனர். இந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு பதறிய திமுக இந்த ஆட்சியில் செய்தது பத்தவில்லை என்று அடுத்த ஆட்சியையும் கைப்பற்ற வேண்டுமென 2026 தேர்தலுக்கான ஆயுத பணிகளை தொடங்கியுள்ளது. 

அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் முதல் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, அமைச்சர் வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் தொகுதிவாரிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி நிலவரம், எம் எல் ஏ வின் பணிகள், கட்சியினர் மற்றும் மக்களின் மனநிலையை அறிய திமுக முடிவெடுத்திருக்கிறது. ஏற்கனவே தன் மகனை துணை முதல்வர் பதவியில் அமர்த்தி தனக்கு பிறகு அவர்தான் என அனைவருக்கும் காட்டு நடவடிக்கைகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வர தற்போது அவரை ஒருங்கிணைப்பு குழுவிலும் பங்கு பெற வைத்துள்ளார். 

இதன் பின்னணியை விசாரித்த சமயம், பல தகவல்கள் கிடைத்தன, அதாவது தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள் கால அவகாசம் இருக்கும் சமயம் இப்பொழுதே தேர்தல் வேலையை ஆரம்பிப்பதற்கு திமுக தலைமைக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் காரணம் என கூறப்படுகிறது.. இந்த முறை மக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள் அதனால் வரும் 2026 தேர்தலை முன்வைத்து இப்பொழுதே வேலையை ஆரம்பித்தால்தான் எதாவது குறைந்தபட்ச தொகுதிகளாவது கிடைக்கும் என அந்த அறிக்கை கூறியதால் இப்படி திமுக திடீரென 2026 தேர்தலை முன்வைத்து இறங்கியதாகவும், உதயநிதியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவிருப்பதால் இந்த திட்டம் எனவும் கூறப்படுகிறது....