24 special

விவரம் தெரியாமல் வினையை தேடி கொண்ட உதயநிதி ஒட்டுமொத்தமாக இறங்க போகும் ஆப்பு!

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

தேசிய அரசியல் ஆசையிலும் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டு பெருமளவு இடங்களை பெற்று விடலாம் என்ற ஆசையில் முதல்வர் இருந்து கொண்டு இந்தியா கூட்டணியில் மூன்று கூட்டங்களிலும் கலந்து கொண்டார். மேலும் அங்கு சென்று இந்தியாவில் மிகப்பெரிய கட்சி திமுக தான் என மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய அடுத்த நாளே தமிழகத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் சனாதன ஒழிப்பு பற்றி பகிரங்கமான கருத்துக்களை அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்து இந்தியா கூட்டணியில் திமுக ஒரு அங்கம் என்பதற்கான ஆப்பை வைத்து விட்டார் எனவும் எழுதிக் கொடுத்ததை பேசுகிறேன் என்ற பெயரில் சனாதன தர்மத்தை பற்றி தமிழ்நாடு முற்போக்கு சங்க எழுத்தாளர் சங்கத்தினர் எழுதிக் கொடுத்ததை உதயநிதி பேசிவிட்டார் எனவும் பல தரப்புகளிடமிருந்து இந்த கருத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. 


அதுமட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியில் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் கருத்திருக்கு எதிராக அதிருப்திகள் எழுந்து வருகிறது. மேலும் பீகாரில் முசாபார்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மற்றும் அமைச்சர் உதயநிதி கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார்! ஆதலால் தனது கருத்தை உதயநிதி திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் மகாராஷ்டிராவிற்குள் அவரை நுழைய விட முடியாது! என உதயநிதி கருத்திற்கு மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா திட்டவட்டமாக கூறினார். 

அதோடு, தமிழக முதல்வருக்கு பாஜக டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களும் முன்வைக்கப்பட்டது. தற்போது சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி கூறிய கருத்திற்கு எதிரான எதிர்ப்புகள் இந்தியா கூட்டணியில் இருந்தும் எதிரொலிக்கிறது அதாவது, இந்த நாட்டின் அடித்தளமாக சனாதனம் உள்ளது, சனாதன தர்மம் என்பது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான தத்துவம்.  மேலும் சனாதனத்திற்கு எதிராக யார் அவதூறாக கூறினாலும் அவர்களுக்கு சனாதனத்தை பற்றிய புரிதல் இல்லை என்பது தான் அர்த்தம்!  என பாஜகவில் இருந்து பிரிந்து வந்த சிவசேனா தரப்பைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் 

மற்றும் இந்தியா பல மதங்கள் ஒன்றிணைந்துள்ளது, எல்லா மதங்களுக்கும் இருக்கும் ஒவ்வொரு உணர்வை நாம் மதிக்க வேண்டும் உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதி, மற்றவர்களின் உணர்வுகள் புண்படும்படி பேசுவது தவிர்க்க வேண்டும், நான் சனாதன தர்மத்தை மிகவும் மதிக்கிறேன் என்று மம்தா பானர்ஜி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதை காங்கிரஸ் கட்சியின் கொள்கை அதோடு ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் பேசுவதற்கு தனி சுதந்திரம் உண்டு அதில் நாங்கள் தலையிட போவதில்லை என பதில் அளித்தார். 

இவருக்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் நமது கலாச்சாரம் நல்லிணக்கம் மட்டுமே அனைத்து மதங்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் உதயநிதி ஸ்டாலினின் கருத்திருக்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று திரிணாமுல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் குனால் கோஷ் கூறி உதயநிதி கருத்திலிருந்து இந்தியா கூட்டணியை பிரித்து விட்டார். இப்படி தொடர்ச்சியாக எதிர்ப்புகளும் அதுவும் திமுக தங்களது வெற்றி பரிசாக கருதி கொண்டிருக்கும் இந்தியா கூட்டணியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் யோசிக்காமல் பேசி விட்டோம் என்ன செய்வதென்று தெரியவில்லையே, பேசாம காலில் விழுந்து விடலாமா என உதயநிதி இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் வேறு நான் தான் சிறிது நாட்களுக்கு எங்கும் பேச வேண்டாம் என்று கூறி இருந்தேனே என்று புலம்பியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.