பெரியாரின் இளமையான மனைவியாக அறியப்படும் மணியம்மை வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர், 1943 இல் மணியம்மையின் தந்தையான கனகசபை பெரியாரின் தொண்டரும் நண்பரும் ஆவார், அதனால் அந்த ஆண்டில் கனக சபைக்கு ஒரு கடிதத்தை பெரியார் எழுதும்போது அருகில் இருந்து என்னை கவனித்துக் கொள்ள தான் யாருமில்லை என்று குறிப்பிட்டு இருந்ததை அடுத்து கனகசபை குலசேகரபட்டினத்தில் படித்துக் கொண்டிருந்த தன் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்று பெரியாருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து அவருடன் இருந்து அவரை கவனித்துக் கொள் என்று தன் மகளை அங்கு விட்டு விட்டு வருகிறார். தன் தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி பெரியாருக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் உடல் நலத்தையும் உணவுகளையும் பார்த்து கவனித்து வந்துள்ளார் மணியம்மை! மேலும் பொதுக்கூட்டங்களில் பெரியார் பேசும் பொழுது குறிப்பு எடுப்பது குடியரசுதலுக்கு அதனை தொகுத்து வழங்குவது பெரியார் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளும்போது அவருடன் சென்று கலந்து கொண்டு அச்சிடப்பட்ட புத்தகங்களை விநியோகம் செய்வது என்ற பல வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு இவரும் பெரியாரின் கருத்துக்களை பல மேடைகளில் முழக்கமிட ஆரம்பித்தார். மேலும் இயக்கத்தின் சொத்துக்களை பராமரிப்பதற்காக 1949 இல் பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்பொழுது பெரியார் தனது இள வயதை தாண்டி வயதானவராக தெரியப்பட்டார் ஆனால் மணியம்மையோ ஒரு இளம் வயது பெண் இதனால் இவர்களின் திருமணத்திற்கு சமூக மத்தியில் பல எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தது! மேலும் தற்போது வரையும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது சொத்துக்களை பராமரிக்க ஒரு ஆள் வேண்டும் என்றால் சம்பளத்திற்கு ஆள் போட வேண்டியதுதானே அதற்காக ஒரு இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா என்று வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த திருமணத்தில் மணியம்மைக்கு ஏதேனும் கட்டாயம் இருக்குமா? என்ற வகையிலான பேச்சுக்களும் இன்றும் அரசியல் வட்டாரங்களில் உலா வருகிறது. பெரியாரும் இறந்த பிறகு கட்சியின் முழு வேலைகளையும் பத்திரிகை நிறுவனத்தில் பொறுப்புகளையும் கவனித்து வந்த மணியம்மை 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்கை எய்தினார்.
முன்னதாக திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சி பொறுப்பை கவனிக்கும் வகையில் 1962ல் பெரியாரால் நியமிக்கப்பட்டவர் தான் வீரமணி! இவர் பெரியாரின் மறைவிற்குப் பிறகும் மணியம்மையின் மறைவிற்கு பிறகும் தற்போது வரை தொடர்ந்து கட்சியை கவனித்து வருகிறார். மேலும் திராவிட கழகம் என்ற கட்சி குறித்தும் பெரியார் இதை கூறினார் அதை கூறினார் என்று பல கருத்துக்களை முன்வைத்து வருவதற்கும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது அதோடு இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டு வருகிறது இந்த நிலை சமூக வலைதளம் பக்கம் இவர் செய்த ஒரு செயல் சமூக வலைதளம் முழுவதும் கவனிக்கப்பட்டதை அடுத்து அதனை சமாளிக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அதாவது பெரியாரின் மனைவியான மணியம்மையின் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டு இருந்துள்ளது இந்த கணக்கை சமீபத்தில் தெரிந்து கொண்ட திராவிட கழகத்தின் தலைவராக தற்போது இருக்கும் வீராசாமி அந்த கணக்கை பின்தொடர்ந்துள்ளார். உடனடியாக அதனை கவனித்த அக்கணக்கின் உரிமையாளர் தன் பதிவில் தன்னை பின் தொடர்ந்த அதற்கு மிக்க நன்றி என்ற வகையில் ஒரு பதிவை விட அதில் சமூக வலைதளம் முழுவதும் பகிரப்பட்டது இதனால் பதறிப் போய் இது ஒரு போலி ஐடி என்பதை உணர்ந்து கொண்டு பிறகு அந்தக் கணக்கு பின் தொடர்வதை நிறுத்திவிட்டார்! இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் வீரமணி என்ற பேச்சு மணியம்மையின் பெயரைக் கண்டால் உடனடியாக பாலோ செய்து விடுவாரா இவர் என்ற வகையிலான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.