24 special

இந்த நேரத்தில் இது தேவையா... சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

AR Rahnan, social media
AR Rahnan, social media

கடந்த ஞாயிறு திங்கள் என இரண்டு தினங்களில் சென்னையில் பெய்த கனமழை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெய்தமழையின் அளவைவிட அதிகம் என்று கூறப்படுகிறது. இதனை தமிழக முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 4000 கோடி செலவழிக்கப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை என்பது போன்ற நிலைமையே இங்கு நிலவுகிறது என மக்கள் ஆளும் அரசின் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 


இந்த நிலையில் மழை நின்று இரண்டு நாட்களுக்கு மேலாகியும் மழைநீரானது சிறிதளவு கூட வற்றவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதாவது வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் என்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் சிறிதளவு கூட முடியவில்லை மெயின் சாலைகளில் உள்ள தண்ணீரை மட்டும் எடுத்துவிட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் தெரு பகுதிகளில் உள்ள தண்ணீரை கண்டு கொள்ளாமல் பேரிகாட் போட்டு அடைத்து விட்டு செல்கிறார்கள். 

தண்ணீரானது 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது,  பால் பாக்கெட்டு 200 ரூபாய் என  என மக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் சரிவை திமுக சந்திக்கும் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.அதுமட்டுமின்றி இன்னும் சில பகுதிகளில் மின்சாரமும் இல்லாமல் மழை நீருக்குள் மூழ்கி உணவுமின்றி கடந்த மூன்று நாட்களாக தவித்து வருகிறோம் என பொது மக்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வரும் ஆளும் அரசின் அமைச்சர்களையும் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஒரு விளம்பர பதிவை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ரெட் சீ ஃபில்ம் விழாவில் ஒரு சினிமா பயணத்தைத் தொடங்குங்கள் மற்றும் துடிப்பான நகரமான ஜெட்டாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'த்ரீ' இன் பிரீமியரை வெளியிடுவதில் நய்ல அலகாக உடன் இணைந்து கொள்ளுங்கள். மூன்றில் உள்ள ஹைலைட் பிரிவில் உங்கள் டிக்கெட்டுகளைப் பாதுகாக்கவும் இன்று ஒரு பிலிம் விழாவிற்கான டிக்கெட் விற்பனை குறித்த விளம்பரத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு விளம்பரப்படுத்தி உள்ளார். இவரின் இந்த பதிவிற்கு இணையதள வாசிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.மேலும்  மழை நின்று மூன்று நாட்களாகியும் பாதிப்பு இன்னும் பாதிப்பாகவே உள்ளது இந்த நிலையில் இவர் மக்களை நினைத்து சிறிதும் கவலைப்படாமல் டிக்கெட் விற்பனை செய்கிறார் இவருக்கு எப்படி தான் மனது வந்தது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இப்படித்தான் கடந்த மாதத்தில் மறக்குமா நெஞ்சம் என்ற ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி நடத்தி அதன்மூலம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் நிகழ்ச்சியையும் பார்க்கவிடாமல் அல்லாட வைத்து நடுரோட்டில் நிற்க வைத்தார். இவரின் ரசிகர்கள் பெரும்பாலானோர் இந்த ஷோவை எங்களால் உண்மையாகவே மறக்க முடியாது என்பது போன்ற விமர்சனங்களையும் முன் வைத்தனர். இவரின் நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் தமிழக முதல்வரும் 20 நிமிடம் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் மக்களைக் குறித்து கவலைப்படாமல் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் லாப நோக்கத்துடன் இருந்த ஏ ஆர் ரகுமான் தற்பொழுது வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் மக்களை நினைத்து கவலைப்படாமல் ஒரு ஷோவை ப்ரோமோஷன் செய்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.