மேயர் பிரியா முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என மக்களே சந்தோசமாக கூறுகிறார்கள் என செய்தியாளர்கள் மத்தியில் பேசி இருந்தார்.அந்த வீடியோ திரையில் ஓடி கொண்டு இருக்கும் போதே செய்தியாளர் ரஞ்சித் நான் தண்ணீரில் நின்றபடி இந்த செய்தியை பார்த்து கொண்டு இருக்கிறேன் என கமெண்ட் செய்தார்.
அதாவது வடிவேலு ஒரு இடத்தில் mic 1 mic 2 எங்கடா இருக்கீங்க என கேட்க உங்க பொடதிக்கு பின்னால் தான் நிற்கிறோம் என சொன்னது போன்று மேயர் பிரியா மழை நீர் நிற்கவில்லை என பேசிக்கொண்டு இருக்க நான் அந்த மழை நீரில் நின்றுதான் செய்தியை பார்த்து கொண்டு இருக்கிறேன் என கமெண்ட் அடித்து இருக்கிறார்.இது ஒருபுறம் என்றால் கடந்த 3 நாட்களாக நான் எவ்வாறு வீட்டில் சிக்கி தவித்தேன் என ரஞ்சித் கூறி இருக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.