24 special

தருமை ஆதினம் கொடுத்த பேட்டி இதுதான் "ஊமை குத்து" என்பதா?

maasilamani and aadhinam
maasilamani and aadhinam

தமிழகத்தில் பேச்சு வாக்கில் ஒரு பழமொழி ஒன்று உள்ளது ஊமை குத்து என விளையாட்டாக சொல்லுவார்கள், அடி விழும் ஆனால் வெளியில் சொல்ல முடியாது என்பது அதன் பொருள் அந்தவகையில் நேற்று தருமை ஆதினம் கொடுத்த பேட்டி தமிழக அரசை பாராட்டுகிறாரா? இல்லை அடுத்த முறை இது போல் நடக்க கூடாது என மென்மையாக சொல்கிறாரா? என்ற சந்தேகம் அதிகரித்து இருக்கிறது.


தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கிய தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் ஆதரவு குரல் கொடுத்த அரசியல் கட்சியினர், இந்து அமைப்பினர், சிவனடியார்கள், பக்தர்கள் அனைவருக்கும் என்றும் சொக்கநாத பெருமான் அருள்கிடைக்க வாழ்த்துகிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இந்த நிகழ்ச்சி தடைபடாமல் நடைபெற்று வந்தது. ஆனால், நிகழாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட இடையூறை நாம் தடங்கலாக பார்க்கவில்லை. மாறாக, இந்தப் பட்டினப்பிரவேசம் குறித்துஇப்போது மாநிலத்தை கடந்து, நாடுகளையும் கடந்து தெரிய வந்திருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.


நிகழாண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட தடங்கலை, தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக தீர்வு கண்டதால், விழா சிறப்பாக நடைபெற்றது. மரபு வழியை பின்பற்றுவதற்கு அரசு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.தருமபுரம் 25-வது ஆதீனகர்த்தர் காலத்தில் பட்டினப்பிரவேசத்தில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமரவைத்து தூக்குவது குறித்த கேள்வியை பெரியாரிடம் அவரது அமைப்பினர் முன்வைத்தபோது, தமிழன் பல்லக்கில் வர வேண்டும் என்றுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என பெரியார் கூறியுள்ளார். அப்போதுகூட,எந்த இடையூறும் இல்லாமல் பட்டினப்பிரவேசம் நடைபெற்றுஉள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது தமிழக அரசு விதித்த தடை மூலம் தருமை ஆதினத்தின் பட்டினம் பிரவேசம் உலக அளவில் பிரபலம் அடைந்து இருப்பதாகவும், அடுத்த ஆண்டும் தடங்கல் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் எனவும் ஆதினம் குறிப்பிட்ட செய்திகள் நேரடியாக ஆளும் அரசிற்கு மூக்கு உடைந்தது போன்று இருந்தது, அதாவது சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அடுத்த ஆண்டு பட்டினம் பிரவேசம் செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அவரின் கருத்திற்கு முற்று புள்ளி வைப்பது போன்று அடுத்த ஆண்டும் பட்டினம் பிரவேசம் நடைபெறும் என்பதை தருமை ஆதினம் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக உணர்த்திவிட்டார். இதுதான் ஊமை குத்து என்பதா என ஆதினம் பேட்டியை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.