இந்தியா : பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ISI ஆகியவை இந்திய எல்லைக்குள் பயங்கரவாத செயலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்திய எல்லைப்பாதுகாப்பு படையான BSF மற்றும் இந்திய துணை ராணுவ பிரிவுகள் பாகிஸ்தானின் சதிச்செயலை தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.
மேலும் பஞ்சாப் எல்லைப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை குறிப்பாக ஆப்கானில் விளையும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை சட்டத்திற்கு புறம்பாக பஞ்சாப் எல்லைப்பகுதி வழியாக கடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் ஏஜெண்டுகளாக சில இந்தியர்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலின் அடிப்படையில் கடந்த வாரம் பஞ்சாப் மற்றும் பிஹாரை சேர்ந்த இரு பாகிஸ்தானுக்கான ISI உளவாளிகள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் சில முக்கிய தகவல்களை இந்திய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கையாக செய்தி வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் எல்லையோர மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள ரயில் இருப்புபாதைகளை குறிவைத்து ISI பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக உளவுத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்லீப்பர்செல்கள் மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள ISI ஸ்லீப்பர் செல்களுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்துவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரயில்வே இருப்புபாதைகளில் கண்காணிப்பை பலப்படுத்த மாநில போலீசாருக்கு இந்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.