24 special

நல்ல மனுஷனுக்கே இந்த நிலையா?; பிடிஆருக்கு எதிராக திமுக மா.செ.க்கள் செய்த செயல்!

Minister moorthy, ptr thiagarajan
Minister moorthy, ptr thiagarajan

திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே சீனியர் அமைச்சர்கள் மற்றும் பதவியில் இருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் மாவட்ட செயலாளர்கள் செயல்படுவார்கள். ஆனால் மதுரையில் திமுக மேயர் உட்பட அமைச்சர் பிடிஆர் தியாகராஜனின் ஆதரவு கவுன்சிலர்கள் பலருக்கும் அம்மாவட்ட திமுக செயலாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 


நிதித்துறை அமைச்சரான பிடிஆர் தியாகராஜன் நேஷனல் தொலைக்காட்சிகளில் திமுகவிற்கு ஆதரவாக வாதிடுவது, அவர் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிகளும் சோசியல் மீடியாவில் வைரலாவது உண்டு.  அதுமட்டுமின்றி ஊழலுக்கு பெயர் போன திமுகவில் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக உள்ளவர் பிடிஆர். அதனால் தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகராட்சியில் எவ்வித சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆதரவாளர் இந்திராணியை மேயராக கொண்டு வந்தார். 

அத்தோடு மதுரையில் பெரும்பாலான கவுன்சிலர்களும் பிடிஆர் ஆதரவாளர்கள் தான். பிடிஆரின் இந்த செயலால் திமுக மதுரை மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, அவரை பழி தீர்க்கவும் காத்திருந்தனர். 

இதனால் பொதுமக்கள் மாநகராட்சி மேயர் அல்லது ஆதரவு கவுன்சிலர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அவர்கள் என்ன செய்தாலும், பிடிஆர் ஆதரவாளர்கள் என்பதாலேயே தங்களை மதிப்பது இல்லை என குற்றச்சாட்டி வந்தனர். 

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத, எதையும் சொந்தமாக சிந்தித்து செயல்படும் அமைச்சர் பிடிஆர் தியாகராஜனிடம் தனது துதிபாடல்கள் செல்லாதது என்பதால், நகர செயலர் தளபதி, மதுரை வடக்கு மாவட்ட செயலரான அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் ஆகியோர் அவருக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர். 

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த தி.மு.க., கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் மூர்த்தி, தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தில் மாநகராட்சி 69 கவுன்சிலர்களில், அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளரான மேயர் இந்திராணி, மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உட்பட 9 கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அமைச்சர் ஆதரவு இருப்பதால் தான் இவர்கள் வரவில்லை என நினைத்த  திமுக மா.செ.க்கள் செய்த காரியம் கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அதாவது கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு 9 கவுன்சிலர்களுக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினால், அமைச்சராகவே இருந்தாலும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் விதிமுறை, ஆனால் மேயர் உள்ளிட்ட 9 பேர் எவ்வித விளக்கமும் தராமல் கூட்டத்தை புறக்கணித்ததால் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளதாம். இது அமைச்சரின் ஆதரவாளருக்கு அல்ல... அமைச்சர் பிடிஆருக்கே வைத்த ‘செக்’ என தொண்டர்கள் பேசி வருகின்றனர். ஆனால் தான் உண்டு , தன் குடும்பம் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் பி டி ஆர் க்கு மதுரை மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.