தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர். என் ரவி அவர்களின் பதவிக்காலம்அடுத்த மாதம் முடிவடைகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னாள் இருந்த ஆளுநர்களை விட ஆர்.என்.ரவி சற்று வித்யாசமானவர். அதிரடிக்கு பெயர் போனவர் தமிழக சட்டமன்றத்தை கலக்கியவர். பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்என் ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்என் ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்என் ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார்.
ஆளுனர் ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், மேகாலயா ஆளுநராக 18 டிசம்பர் 2019 முதல் 26 ஜனவரி 2020 வரையிலும் பணியாற்றினார் என்பது குறிப்படத்தக்கது. இது தவிர மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய ஆர்என் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நக்சலைட் வன்முறையை முடிவுக்கு கொண்டுவந்தவர். ஆகஸ்ட் 2015 இல் நாகலாந்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான முக்கிய கட்டமைப்பு ஒப்பந்தம் இவரது பணி காலத்தில் தான் நடந்தது. 1997 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இப்பகுதியில் அமைதியை எட்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராகியுள்ளார்.தற்போது ஆளுநராக உள்ள ஆர்.என் ரவி அவர்கள் தமிழக சட்டமன்றத்தை கலக்கி வருகிறார். ஆளுநர் என்றால் வெறும் கையெழுத்து போடுபவர் அல்ல தவறாக அரசு செயல்பாட்டால் அதை திருத்தும் அதிகாரம் படைத்தவர் என திமுக அரசுக்கு பாடம் எடுத்து வருகிறார் ஆளுநர் ஆர்.என் ரவி. ஜனவரி 2023 இல், "தமிழகம்" என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும் என்று ரவி பரிந்துரைத்தார், மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆளும் அரசியல் கட்சிகள் பிற்போக்குத்தனமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேபோல் ஜனவரி 9, 2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது,ரவி தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட உரையில் இருந்த முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பேசினார். பெரியார் திராவிடத் தலைவர்கள் பற்றிய பகுதிகள் போன்ற சொற்களைத் தவிர்த்து கெத்து காட்டிவருகிறார். சனாதனத்தை தூக்கி பிடித்து வருபவர். சுதந்திர போராட்டவீரர்களை கொண்டாடி வருபவர்.காவி திருவள்ளுவரை போற்றி வணங்குபவர். குறிப்பாக என தினமும் தமிழக செய்தி தாள்களில் இடம் பெற்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவி அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிகிறது. அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா இல்லை தமிழகத்திற்கு வேறு ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநராக நீடிக்க வைக்கலாமா? மத்தியில் பெரிய பொறுப்பு கொடுக்கலாமா? அல்லது புதிய ஆளுநராக தமிழ்நாட்டிற்கு வேறு ஒரு பாஜக தலையை கொண்டு வரலாமா என்று ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறதாம்.இதற்கான ஆலோசனைகளை, லிஸ்டுகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
ஆளுநர் பதவியை விட தென்னிந்தியா பாதுகாப்பை கவனிக்கும் பொறுப்பை கொடுக்க அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். ரா பிரிவின் தலைவர் அஜித் தோவல் குழுவில் பணியாற்றியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி மேலும் கேரளாவில் பணியாற்றியுளார். தமிழகத்திலும் ஆளுநராக பதவி வகித்துள்ளதால் மீண்டும் பாதுகாப்பு துறைக்கு அழைக்கப்பட்டு சிறப்பு அதிகாரி பதவி வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறதாம். தீவிரவாத நடமாட்டம் அதிகம் காணும் தென்னிந்திய பகுதிகளை குறித்த அறிக்கைகள் ஏற்கெனவே ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கையாக தயாரித்து வைத்துளார். அதுமட்டுமில்லாமல் கஞ்சா போதை கடத்தல் குறித்தும் அதில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அந்த அறிக்கையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் உள்ளது. மேலும் ஆளுநராக இருப்பதை விட பாதுகாப்பு துறையில் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டால் தமிழகத்தில் பல அரசியல்வாதிகளை கைது செய்ய எளிதாக இருக்கும் என நினைக்கிறாராம் ஆளுநர் ஆர்.என்.ரவி