
எல்லோருமே சம்பாதிக்கும் பணத்தினை அவர்களின் தேவைக்காகவோ அல்லது அவர்களின் எதிர்காலத்திற்காகவோ வைத்துக் கொள்கின்றனர். வளர்ந்து வரும் இளைஞர்கள் கூட இது போன்ற மற்றவர்களுக்கு உதவும் குணத்திலே வளர்த்துக் கொள்வதே கிடையாது. மிகவும் சுயநலத்தோடு தற்போது உள்ளவர்கள் அனைவருமே வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்களே பூமியில் அதிகம் இருந்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு மத்தியில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உள்ள ஒருவர் இருக்கிறார் என்று கூறினால் நம்ப முடிகிறதா?ஆம் தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னுடைய தேவைகள் போக மற்ற அனைத்து சேமிப்புகளையும் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு வேண்டியவற்றை வாங்கி கொடுத்து உதவி செய்து வரும் ஒருவர் தற்போது உள்ள காலகட்டத்திலும் வாழ்ந்து வருகிறார். அவர் தொடர்ந்து மக்களுக்கு செய்து வருவது குறித்த வீடியோக்கள் இணையங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த அளவிற்கு அனைவருக்கும் உதவி செய்பவர் யார்?? மேலும் அவர் சமீபத்தில் செய்த உதவி என்ன?? என்பது குறித்த விரிவான தகவல்களை அறியலாம்!!தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோகளில் பங்கேற்று வரும் நடிகர்கள் கே பி ஒய் பாலா!! இவர் கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு வந்தார். மேலும் குக் வித் கோமாளி என்னும் பிரபல நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று சூப்பராக காமெடிகள் செய்து வந்தார். மேலும் தற்பொழுது இவருக்கு திரைப்படம் உள்ளிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி இன்று நல்ல நிலையை அடைந்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தனது சேமிப்பில் பலருக்கு உதவி செய்து வருகிறார். கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத ஊருக்கு ஆம்புலன்ஸ் அவங்களுக்கு கொடுப்பது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, ஊனமுற்ற ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி உதவியது, பெட்ரோல் பங்கில் வேலை பார்க்க ஒருவருக்கு இரு சக்கர வாகனம் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்தது என பல உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார். இவ்வாறு தொடர்ந்து பல உதவிகளை தன்னிச்சையாக செய்து வந்த கே பி ஒய் பாலா தற்பொழுது ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே தனியாக உதவிகளை செய்யும் பொழுது நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து உதவிகளை செய்ய ஆரம்பித்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் கே பி ஒய் பாலா சமீபத்தில் தான் அடிக்கடி பெட்ரோல் போட செல்லும் பெட்ரோல் பங்கில் சிறுவன் ஒருவன் வாட்டர் பாட்டில் வித்து வருவதை பார்த்துள்ளார். சமீபத்தில் அந்த சிறுவனை அழைத்து குடும்ப கஷ்டத்தை கேட்டு அறிந்து விட்டு அவனை காரில் அழைத்து சென்று சிறுவனின் வீட்டிற்கு போய் பணம் கொடுத்தால் வேலைக்கு இனிமேல் போகாமல் பள்ளிக்கு சென்று படிப்பாயா என்று கேட்டவுடன் அந்த சிறுவனும் படிக்கிறேன் என்று கூறியுள்ளான். உடனே அந்த சிறுவனின் ஒரு வருட படிப்பிற்கு தேவையான தொகையை அவனின் தாயிடம் கொடுத்து படிக்க வைக்க கூறியுள்ளார். வரி இவர் செய்த காரியம் தற்பொழுது அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. மேலும் சம்பாதிக்கும் இளமை வயதில் இப்படி சம்பாதித்த பணத்தை சேர்த்துவைக்காமல் செலவு செய்வது இந்த மார்டன் உலகில் நல்லதில்லை என வேறு அறிவுரைகள் இணையத்தில் முன்வைக்கப்படுகிறது அனாலும் கே.பி.ஒய். பாலா அதனை ஏற்காமல் தொடர்ச்சியாக தனது உதவி செய்யும் வேலையை செய்து வருகிறார்...