24 special

தேர்தலை முன்னிட்டு திமுக அரசு செய்த காரியம் பின்னணியில் இதுதானா....?

mkstalin, djp sanker jival
mkstalin, djp sanker jival

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது அதே சமயத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலின் பொழுது தனது தரப்பை வலுப்படுத்துவதற்கு கூட்டணி அமைக்கும் ஆலோசனைகளில் இருந்து வரும் நிலையில் ஆளும் அரசு தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல மாற்றங்களை செய்து வருகிறது. முன்னதாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்ட அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேரலை தமிழகத்தில் ஒளிபரப்பப்படவில்லை இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பல அரசு அதிகாரிகளின் பணிகளை மாற்றி வருகிறது. முதலில் கடந்த அக்டோபர் மாதத்தில் 37 டிஎஸ்பி களை பணியிடை மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அந்த பணியிடை மாற்றத்தில் சென்னையில் மட்டும் 12 உதவி ஆணையர்களின் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது.


முன்னதாக தமிழகத்தின் 12 ஐ ஏ எஸ் அதிகாரிகளின் பணிகளையும் மாற்றம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதத்திலும் தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு சென்னை, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிஎஸ்பிகள் காவல் உதவி ஆணையர்கள் என மொத்தம்  55 காவல் அதிகாரிகளும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு மற்றுமொரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் காவல் அதிகாரிகள் சொந்த ஊரில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோரின் பட்டியலை கேட்டுள்ளார் டிஜேபி சங்கர் ஜிவால், மேலும் திடீரென சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 122 காவல் ஆய்வாளர்களின் பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இவரது இந்த திடீர் உத்தரவருக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியினை மாற்றம் நடைபெற்றுக் கொண்டே வருகிறது அதுவும் சென்னையில் மட்டும் 40க்கும் மேற்பட்ட ஆய்வாளர் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட காவல் துறையில் உதவி ஆணையர்கள், 100க்கும் அதிகமான டிஎஸ்பிகள் தமிழக முழுவதும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயுதப் பணிகள் கட்சி தரப்பிலும் தேர்தல் ஆணையம் தரப்பிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகளின் பணிகளை மாற்றமும் அவ்வப்போது நடைபெற்று வருவது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனை அடுத்து இதன் பின்னணியை விசாரித்த பொழுது அண்ணாமலைக்கு காவல் அதிகாரிகள் அதிக அளவில் ஆதரவு கொடுப்பதாகவும் முக்கிய தகவல்களை காவல் துறையை சேர்ந்த அதிகாரிகளே கொடுப்பதாக அறிவாலய தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனால் இது போன்று மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காகவும் பாஜக பக்கம் வெற்றி போய்விடக் கூடாது என்பதற்காகவும் திமுக அரசு இந்த வேலையை செய்திருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் ஏற்கனவே பல வழிகளில் நமது செல்வாக்கை இழந்து வருகிறோம் இதில் காவல் துறையும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் மொத்தமும் தோல்விதான் என்று ஆலோசித்து அறிவாலயம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.