24 special

மணல் மாஃபியா மூலம் அறிவாலயத்திற்கு செக் வைத்த டெல்லி!

arivalayam, ed
arivalayam, ed

கனிம வளம் என்பது ஒவ்வொரு பகுதிக்கும் மிக முக்கியமானது. ஏனென்றால் நிலம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருந்தால் மட்டுமே அதில் விவசாயம் மேற்கொள்ள முடியும், பேரிடர் போன்றவை ஏற்படாத வகையில் பாதுகாக்க முடியும். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் மணல் குவாரிகளின் போர்வையில் மணல் மாஃபியாக்கள் மணலை கடத்தி வரும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு தமிழகத்தில் மணல் குவாரிகளின் முறைகேடு என்பது அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. அதுமட்டுமின்றி மணல் குவாரிகளிலும் சோதனையை தொடங்கியது. மேலும் இந்த சோதனையானது காவிரி, கொள்ளிடம் போன்ற ஆற்றின் மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டுள்ள அளவையும் மணல் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தையும் கருத்தில் கொண்டு சோதனை இட்டனர். 


அதுமட்டுமின்றி ட்ரோனை பயன்படுத்தி மணல் குவாரியின் பரப்பளவையும் எந்தெந்த பகுதிகளில் மணல் தூண்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது மணல் தூண்டப்பட்ட அளவையும் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கணக்கிட்டனர், இந்த சோதனைகள் அனைத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தியும் அதற்கான வல்லுநர்களையும் தன்னுடன் சோதனை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி,. நாமக்கல் , வேலூர், கரூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளின் அதிபர்கள் வீட்டிலும் அவர்களது அலுவலகங்கள் உள்ளத்த இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் முன்னணி மணல் குவாரிகளின் உரிமையாளர்களாக அறியப்படுகின்ற ராமச்சந்திரன், ஹனிபா நகரின் பிரபல தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்கள் அவர்களின் உரிமையில் நடைபெற்று வரும் மணல் குவாரிகள், மணல் கிடங்குகள் அனைத்தையும் சல்லடை போட்டு சோதனைகள் ஈடுபட்டது அமலாக்கத்துறை! 

இதன் முடிவில் பல முக்கிய ஆவணங்களையும் கட்டு கட்டான ரசீதுகளையும் முறையற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கியூ ஆர் கோடுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர், இதனால் தமிழகத்தில் மணல் குவாரிகள் மூலம் நடைபெற்று வந்த மணல் கடத்தல் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியானது. இதனைத் தொடர்ந்து மணல் குவாரிகள் மற்றும் முக்கிய தொழிலாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்த அமலாக்கத்துறை தற்போது அவர்களின் 130. 60 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களையும் ரூபாய் 128.34 கோடி மதிப்பிலான கட்டுக்களையும் சட்டவிரோத மணல் அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதற்கு சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம் பன்னீர்செல்வம் கரிகாலன் மற்றும் பலரது வங்கி கணக்குகளையும் முடக்கியது. இதுகுறித்து அமலாக்கத்துறை தனது சமூக வலைதள பக்கத்திலும், ED தற்காலிகமாக சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. 

சுமார் 130.60 கோடி அசையும் சொத்துக்கள் உட்பட ரூ. 128.34 கோடி மதிப்பிலான 209 மணல் அகழ்வு இயந்திரங்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளன. மேலும்,  சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரெத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் மற்றும் பிறருக்குச் சொந்தமான 35 வங்கிக் கணக்குகளில் 2.25 கோடி ரூபாய் பி.எம்.எல்.ஏ., 2002 இன் விதிகளின் கீழ் தமிழக மாநிலத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டது. இதனால் தேர்தல் நேரத்தில் இவர்களின் கணக்குகள் மூலம் பணத்தை பட்டுவாடா செய்யும் ஆலோசனையில் இருந்த திமுகவின் திட்டத்திற்கு அமலாக்கத்துறை மொத்தமாக மண்ணள்ளி போட்டு விட்டதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.