கேரளா : கேரளா மேற்குவங்கம் இரண்டு மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பிரமுகர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதில் கேரளா பழிவாங்கல் கொலைகளில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் பெயர்களை அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களால் கொலை செய்யப்பட பட்டியலிடப்பட்டுள்ளதாக கேரளாவை சேர்ந்த ஜனம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஸ்ரீனிவாசன் என்பவர் இந்த அடிப்படைவாத அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து 12 மாவட்டடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கடுமையான சோதனைகள் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். மேலும் குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுபவர்களின் செல்போன் தரவுகள் பரிசோதிக்கப்பட்டன. செல்போனை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட PFI உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சுபைரின் கொலைக்கு பழிவாங்க பிஜேபி உறுப்பினர்களை கொள்ள திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் PFI தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஸ்ரீனிவாசனின் கொலைவழக்கில் கைதான முகம்மது பிலால், ரியாசுதீன் முகம்மது ரிஸ்வான் மற்றும் சாஹாத் ஆகியோர் கொலை செய்யும் நோக்கத்தோடு பாலக்காடு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்படவேண்டிய பட்டியலில் பிஜேபி மாநில பொதுச்செயலாளர் சி.கிருஷ்ணகுமார் பிஜேபி இளைஞரணித்தலைவர் பிரசாந்த் சிவன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட ஸ்ரீனிவாசனின் பெயரும் அந்த பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து PFI மற்றும் SDPI உறுப்பினர்களால் பல முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொலைசெய்யப்பட்டு வருவதால் அந்த அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சிறிது நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தொண்டர்களுக்கு ஆடியோ மூலம் எச்சரிக்கை விடுத்து இருந்தார், pFI மற்றும் SDPI போன்ற அமைப்புகள் தடை செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் பாஜக முக்கிய தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த சூழலில் கேரளாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சியான ஜனம் டிவி பாஜகவினரை கொலை செய்ய ஒரு ஹிட் லிஸ்ட் ரெடி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அண்ணாமலை தெரிவித்ததை மெய்படுத்தும் வகையில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.