சிதம்பரம் நடராஜரை யூடுப்பர் ஒருவர் இழிவுபடுத்தும் விதமாக பேசிய நிலையில் ஆதினங்கள் வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வியை பல்வேறு முன்னோட்டங்களுடன் எழுப்பி இருக்கிறார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
சிதம்பரம் நடராஜ பெருமானை கொச்சைபடுத்தி வந்த வீடியோ குறித்து பலதரபட்டவர்களும் கண்டனம் தெரிவிக்கின்றார்கள், தமிழக பாஜகவும் அதனை கண்டித்திருக்கின்றது அண்ணாமலை அதனை பகிரங்கமாக கண்டித்திருக்கின்றார்.
தமிழகத்தில் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இருக்க முடியாது, பாஜக சார்பில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் காவியுமாக அண்ணாமலை அவர்கள் நோன்பு துறப்பில் கலந்து கொண்டார், இதே போன்று குல்லாவும் இஸ்லாமியர் அடையாளங்களுடன் இஸ்லாமிய பெருமக்கள் பங்குபெறுமாறு தீபாவளி பொதுவிருந்தில் பங்குபெற அண்ணாமலை அவர்களால் அழைக்கபடுவார்கள் அதுவும் நடக்கும்.
இப்படிபட்ட அருமையான மத நல்லிணக்கத்தை பாஜக முன்னெடுத்து செல்வது நல்ல விஷயம் ஆனால் தமிழக அரசு என்ன செய்கின்றது? ஒரு பக்கம் இப்தார் நோன்புக்கு எல்லா உதவிகளையும் செய்கின்றது, திமுக கட்சி சார்பில் இப்தார் நோன்பு துறப்புக்கள் நடக்கின்றது இது நல்ல விஷயம்.
அதே நேரம் இந்துக்கள் மனம் புண்படும்படி ஒரு கூட்டம் பகுத்தறிவு என இம்சிக்கும்பொழுது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா? ஒரு கண்டனம் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யவில்லை ஏன் என்பதுதான் தெரியவில்லை, இந்து அறநிலையதுறை என்பது இந்துகோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்ய அதிகாரம் கொண்டது சந்தேகமில்லை, ஆனால் இம்மாதிரி இந்துக்கள் மனதை கொச்சைபடுத்தும் கொடுமைகளை அவர்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா?
சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையதுறைக்கு வராது என்பதற்காக எல்லா கோவில் சிவனையும் கொச்சைபடுத்துவதை அவர்கள் எப்படி ஏற்றுகொள்கின்றார்கள்? இதுவா தர்மம்
இந்துக்கள் காணிக்கை வேண்டும், இந்து ஆலய வருமானங்கள் வேண்டும் ஆனால் இந்து தெய்வங்களை கொச்சைபடுத்தினால் அமைதி காப்போம் என அறநிலைய துறை கருதுமானால் அது சரியான விஷயமாக இருக்க முடியாது, அத்துறைக்கும் அறம் வேண்டும்.
இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் யூ டியூப் நிறுவணத்தை கட்டுபடுத்தும் அதிகாரம் கொண்ட மத்திய இலகா என்ன செய்கின்றது என்பதுதான் விஷயம், அந்த துறைக்கு பாஜகவின் முருகன் அவர்கள்தான் இணை அமைச்சராக இருக்கின்றார், அவர் ஏன் அமைதி என்பதுதான் புரியவில்லை?
இவ்வளவு பெரும் கொடுமை நடக்கும் பொழுது தமிழக ஆதீனங்கள் ஏதும் வாய்திறக்குமா என்றால் திறக்காது அவை சஷ்டி கவச கொச்சைபடுத்ததிலும் திறக்கவில்லை இப்பொழுது இந்த நடராஜபெருமானையும் அன்னை காளியினையும் அவமானபடுத்தும்பொழுதும் வாயே திறக்கவில்லை ஏன் என்றால் அவர்கள்தான் ஆதீனம், அதாவது அந்த பெயரில் இருக்கும் திராவிட அபிமானிகள் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.