சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உதயநிதி பேசியது தான் தற்போது நாட்டில் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது சனாதனத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருந்தார் மேலும் இதைப்பற்றி அகில இந்திய அளவில அனைவரும் பேசிவரும் நிலையில் இது பற்றி இனி மேலும் அனைவரும் பேச வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மேலும் தான் கூறிய கருத்தில் மிக உறுதியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இதனால் வரும் விளைவுகளை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறியதோடு ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று கூறியது தற்போது திமுகவில் உள்ள தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை கதி கலங்க செய்துள்ளது.இவ்வாறு உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இதனால் I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை இந்திய கூட்டணியில் வைத்துக் கொண்டிருந்தால் கூட்டணிக்கு ஆபத்து ஏற்படுத்துவதோடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அது எதிரொலிக்கும் எனவே திமுகவை I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தைகளும் நடத்தியதாக தெரிகிறது.
எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுக கட்சி I.N.D.I.A தாக்குப்பிடித்து இருக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் திமுக கட்சியில் இருக்கும் அமைச்சர்களும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி திமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர்.சனாதன சர்ச்சை குறித்து இந்தியா கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிவ சேனாவில் இருந்து உத்தவ் தாக்கரேவும் காங்கிரஸிலிருந்து ராகுல் காந்தியும் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை இந்நிலையில்தற்போது பாஜக பூகம்பம் ஒன்றை கிளப்பியுள்ளது. இதன் மாஸ்டர் பிளான் என்ன என்று விசாரித்த போது இவர்கள் இருவரும் சனாதனம் குறித்து இன்னும் பேசாத இதற்கு முக்கிய காரணம் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அனுராக் தாக்கரிடம் கேள்வி எழுப்பியபோது சனாதனம் என்பது அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் ராகுல் காந்தி மற்றும் தாக்கரே ஆகிய இருவரும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் பதவி ஆசையில் இருந்து வருவதாகவும் அனைத்து தலைவர்களும் சனாதனம் குறித்து உங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் இருவரும் மற்றும் கருத்தை தெளிவாக தெரிவிக்காததற்கு காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
இப்பொழுது நிலவரப்படி சிவசேனா மற்றும் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி இருவரையும் சனாதன தர்மம் குறித்து பேசவைத்தால் அது நாடு முழுவதும் பேசுபொருளாகும், எப்படியும் அவர்கள் இருவரும் சனாதன தர்மத்தை பற்றி இழிவாக பேசமாட்டார்கள் அப்படியே சனாதன தர்மத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அது கூட்டணி கட்சியான திமுகவை இழிவுபடுத்தியது போல் ஆகும் இப்படி செம்ம மாஸ்டர் பிளானுடன் பாஜக தரப்பில் இருந்து இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து வரும் நாட்களில் இன்னும் பல தேசிய தலைவர்கள், எம்.பி க்கள் பேசுவார்கள் கண்டிப்பாக காங்கிரஸ் மற்றும் சிவசேனாவிற்கு இது தலைவலியை ஏற்படுத்தும் எனவும் இது எல்லாத்துக்கும் உதயநிதிதான் துருப்புசீட்டு எனவும் வேறு கூறப்படுகிறது...தற்போது எழுந்துள்ள சனாதன பிரச்சனையை வைத்தே இந்தியா என்கிற கூட்டணியை முடித்துவிட டெல்லி மேலிடம் பக்காவாக பிளான் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.