24 special

இன்னும் 3 மாசம்தானமே...! அறிவாலயத்திற்கு அமலாக்கத்துறை குறித்த நாள்...!

arivalayam , ed
arivalayam , ed

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அமலாக்கத்துறைக்கும் தமிழகத்திற்கும் இடையே அதிக நடவடிக்கைகள் இருந்ததை செய்திகளில் பார்த்திருப்போம், இந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பே அமலாக்கத்துறையிடம் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரியின் அடிப்படையில் மணல் விற்பனை செய்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் மணல் குவாரிகள் இருக்கும் பகுதிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை  சென்னை, விழுப்புரம், திருச்சி, கரூர் போன்ற பத்திற்கு மேற்பட்ட மாவட்டங்களில் 25 இடங்களில் சி ஆர் பி எப் அதிகாரிகளுடன் சோதனைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டது அப்பகுதிகள் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த ரெய்டு மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் வரை நீடித்தது.


இப்படி ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டது கணக்கில் வராத ஒப்பந்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா ஆன்லைனில் கோரப்பட்டு இருக்கும் விண்ணப்பத்திற்கு சரியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா ஆஃப்லைனில் ஏதேனும் முறைகேடான விற்பனைகள் நடந்துள்ளதா கணக்கில் வராதபடி மணல் அள்ளப்பட்டுள்ளதா என்ற பல கோணங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில் மணல் குவாரியில் பெரும் தொழிலதிபராக கருதப்படுகின்ற ரத்தினம் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபராக இருக்கின்ற ராமச்சந்திரன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை விட்டு அதில் சில ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இந்த ரெய்டின் பொழுது கவனிக்கப்பட வேண்டிய ஒரு மற்றொரு விஷயம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களை தாண்டி கனிமவள அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை இட்டது கவனிக்கப்பட வேண்டியதாயிற்று. ஆலந்தூரில் உள்ள நீர்வளத்துறை பொறியாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது மற்றும் சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை நடைபெற்று அவரை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது அறிவாலய தரப்பை திடிக்கிட வைத்தது ஏனென்றால் முதல்வர் மு க ஸ்டாலினின் மருமகனாகிய சபரீசன் மற்றும் சில முக்கிய திமுக அமைச்சர்களுக்கு இவரே ஆடிட்டராக இருந்துள்ளார் என்பதே காரணம்! அதோடு கனிமவளத்துறை அதிகாரிகளின் வீடு மற்றும் அதன் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றதையும் தாண்டி மூன்று கனிமவள அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் பின்னணியை விசாரித்த பொழுது, இதுநாள் வரையில் திமுக அமைச்சர்கள் கடந்த ஆட்சி காலத்தில் செய்த தவறுக்குத்தான் அமலாக்கத்துறை சுற்றி வந்து ரெய்டு, விசாரணை கைது மற்றும் அதன் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை செய்துள்ளது.

 ஆனால் இப்பொழுது நடந்துள்ள மணல் விவகாரம் இந்த ஆட்சியில் நடந்த தவறுக்கே அதாவது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் சட்டவிரோதமாக இயற்கை வளங்களை கொள்ளை அடித்ததற்கு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது, இவ்வாறு நடக்கும் பட்சத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளை வைத்தே ஆளுநர் திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இப்பொழுது நடைபெற்ற சோதனை திமுக அரசிற்கு மொத்தமாக ஆப்படிக்கும் ரெய்டு என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இன்னும் 3 மாத காலத்தில் திமுகவின் தலையெழுத்தையே இந்த ரெய்டு மாற்றப்போகிறது என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், அந்தளவிற்கு இந்த ரெய்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த ரெய்டு ஒட்டுமொத்த அறிவாலயத்திற்கும் போடப்பட்ட ஸ்கேட்ச் எனவும் கூறுகின்றனர்.