24 special

சிறுத்தைகளா கம்ம்முனு இருங்கப்பா...! திருமாவளவன் கொடுத்த எச்சரிக்கை...!

udhayanithi, thirumalavan
udhayanithi, thirumalavan

சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்ற போது அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறேன் என்ற பெயரில் பேசியது சர்ச்சையானது, ஆனால் அந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேடையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி அவதூறாக பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட இந்து மதத்தை விமர்சித்து தனது கருத்தை தெரிவித்து இருந்தார். மேலும் சனாதனம் என்பது இந்திய நாட்டில் உள்ள இந்துக்களிடையே மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டு வரும் நிலையில் தேசிய அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு மக்கள், இளைஞர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை உதயநிதிக்கு எதிராக பதிவு செய்து வந்தனர் இதனால் திமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.


இதனால் தேசிய அளவில் I.N.D.I.A கூட்டணிக்கு பெரும் பிளவு ஏற்படுத்தும் என்றும் கட்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்த திருமாவளவன் ஏற்கனவே சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறிக் கொண்டிருந்தவர் ஆனால் தற்பொழுது சனாதனத்தை தவறாக சித்தரித்து பேசுகிறார்கள் என்ற பெயரில் பல்டி அடிக்க முயற்சிசெய்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசியபோது, 'அறநிலைத்துறையில் நடந்து வரும் ஊழல்களை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கட்டுப்படுத்தி வருகிறார் என்றும் அவரது பதவியை பறிப்பதற்கு பாஜகவினர் தற்போது முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் அவர்களது கனவு ஒருநாளும் பலிக்காது' எனசுட்டிக்காட்டி பேசியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஷெகவாத் சனாதனத்தை பற்றி யார் பேசினாலும் அவர்களின் நாக்கை அறுப்போம் என்று எச்சரித்ததை சுட்டிக்காட்டி இதுதான் சனாதனத்தை வைத்து செய்யும் அரசியல் என்று கூறியதோடு சனாதனத்தின் கொள்கை இப்போது என்ன என்று தெரிகிறதா என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் சனாதனத்தை பற்றி பேசியதற்கு மக்கள் வடநாடுகளில் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மக்களின் நம்பிக்கையை பேசுவது ஆகாது என்று கூறி 'சனாதனம் என்றால் சமூகத்தினர் இடையே பாகுபாடு காட்டுவதும் குறிப்பிட்ட சமூகத்தினரை ஒதுக்கி வைப்பது தான்' எனவும் கூறி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியதை அப்படியே மாற்றிப் பேசி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.ஏற்கனவே I.N.D.I.A கூட்டணியில் சனாதனத்தை பற்றி உதயநிதி பேசியதற்கு திமுகவை கூட்டணியில் வைத்துக் கொள்ளலாமா அல்லது கூட்டணியை விட்டு விலகி விடலாமா என்ற அளவிற்கு தேசிய கட்சிகள் சிந்தித்து வரும் நிலையில் எங்கே நமக்கும் ஆபத்து வந்துவிடுமோ என உணர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சனாதனத்தை திரிக்க முயல்கிறார்கள் என பேசி தப்பிக்கப்பார்த்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

திருமாவளவன் இவ்வாறு பேசியதன் பின்னணியை விசாரித்த போது இப்படியே போனால் 2019 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றது போன்று 2024ல் தேர்தலில் எந்த தொகுதியிலும் நிற்க முடியாது, எந்த தொகுதியில் நின்றாலும் அங்கு இந்து மக்களின் வாக்கு வங்கி தோற்கடித்து விடும் என்ற பயத்தில் தற்போது சனாதனத்தை ஒழிப்போம் என்று கருத்தை தெரிவித்துவிட்டு கூட இருந்த உதயநிதியையும் கோறுத்துவிட்டு பின் எதிர்ப்புகளை எல்லாம் பார்த்து பயந்து கொண்டு 'பாஜக தான் சனாதனத்தை சித்தரித்து பேசுகிறார்கள்' என்று பல்டி அடித்து பேசியுள்ளார் என்று வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.இனி இந்த விவகாரம் குறித்தும் தேர்தல் முடியும் வரை பேசக்கூடாது எனவும் வேறு திருமாவளவன் தனது கட்சியினருக்கு கூறியுள்ளதாக சில தகவல்கள் கசிகின்றன..