24 special

செந்தில் பாலாஜி அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர போகிறது

Senthil balaji
Senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானவரித்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தொடரும் இந்த ரெய்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருமானவரித் துறையினரின் இந்த ரெய்டிற்கு முக்கிய காரணங்களாக போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பண மோசடியில் ஈடுபட்டதும், டாஸ்மார்களில் செய்த ஊழல்கள் மேலும் அந்த ஊழலை பத்திரிகையாளர்கள் மத்தியில் மறைப்பது போன்று அது பற்றி ஒன்றுமே தெரியாதது போன்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதால்  மது பிரியர்கள் அனைவரும் டாஸ்மார்க் கடைகளில் நடைபெற்ற ஊழல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு  வைரலாகி வந்தனர்.


இந்த புகார்களே முக்கிய காரணங்களாக பார்க்கப்பட்டது.  குறிப்பாக டாஸ்மாக் மது கடைகளில் விற்கப்பட்ட மது பாட்டில்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்கப்பட்டுள்ளது ஏன் விற்க்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு எங்களுக்கு தெரியாது மேலிடம்தான் கூறினார்கள் என்று கூறிய வீடியோ தான் இந்த வருமானவரித்துறை சோதனைக்கு முக்கிய காரணமாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி வருமானவரித்துறையினரின் இந்த சோதனைக்கு டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் சம்பந்தப்பட்ட வீடியோ முக்கிய காரணம் கிடையாது, ஆனால் இந்த பத்து ரூபாய் வீடியோகளுக்கு சூத்திரதாரராக இருந்தவர்

அசோக் குமார் என்று கூறப்படுகிறது.  இவர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆவர், மேலும் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய நபராக இருந்துள்ளார். அதாவது 2011 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக பதவி ஏற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் பணிகள் வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரில் பாதிக்கப்பட்ட அனைவருமே செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்கின் பெயரையே கூறி உள்ளனர். 

இதற்கு அடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு குறுகிய காலங்கள் உள்ள நேரத்தில் ஆவரங்குறிச்சியில் உள்ள தொகுதியில் பண பட்டுவாடா அதிகமாக நடைபெற்றது என்று அந்த தொகுதியில் தேர்தலும் நிறுத்தப்பட்டது. இந்தப் பணபட்டுவாடா புகாரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் அடிபட்டது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பணம் வழங்கியவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த பண பட்டுவாடாவில் அசோக்கிங் பெயரையே தலைமை செயலக வட்டாரங்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த டாஸ்மாக் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதிலும் கரூர் கம்பெனியின் வேலையாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கூறிய உத்தரவே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஏன் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்று கேட்டதற்கு டாஸ்மார்க் ஊழியர் எல்லாம் மேலிடத்திற்கு தான் தெரியும் அவர்கள் கூறியபடியே விற்கிறோம் என்று கூறியதற்கு பின்னால் இருப்பது இந்த அசோக்கே என்ற தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இவர்தான் கரூர் கம்பெனியின் தலை என்றும் தகவல் கிடைத்துள்ளன.

இவர் கூறியதால்தான் குண்டர்கள் கரூர் கம்பனி என்ற பெயரில் டாஸ்மாக் கடையில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்தான் எங்களை மிரட்டுகிறார் என தொழிற்சங்க ஆட்கள் கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மட்டுமல்லாமல் இவரை குறிவைத்துத்தான் வருமானவரித்துறை சோதனையில் குதித்தாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த அசோக் குமாரால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என அரசியல் விமர்சகர்களும், பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.