24 special

சீன ராணுவத்தினரை துண்டைக் காணோம் துணியக் காணோம் என ஓடவிட்ட இந்திய இராணுவத்தினர்...!

Indian army , china army
Indian army , china army

கடந்த முறை லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 300-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் எல்லையை தாண்டி உள்ளே வர நினைத்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த நமது ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்திய பொழுது எல்லை மீறியதால், கைகலப்பு ஏற்பட்டது. 


350-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இரும்பு ராடு, ஃபென்சிங் முள் கம்பிகள் சுற்றிய கட்டைகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய போது வெறும் 45 பேர் கொண்ட நமது ராணுவ வீரர்கள் அதிரடியாக சண்டை போட்டு சீன ராணுவ வீரர்களை ஒரு அடி கூட  உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தினர்.

அந்த தாக்குதலில் நமது ராணுவத்தினர் 20 பேரும் சீன ராணுவத்தில்  50க்கும் மேற்பட்டோருக்கும் இறந்ததாக அமெரிக்க பத்திரிகைகள் உட்பட செய்திகள் வெளியானது.

பிறகு இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவ தளபதிகள் மட்டத்தில் பலகட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒருவழியாக பதட்டம் குறைந்தாலும்.

சீன அரசையும் , அதன் ஆக்கிரமிப்புகளையும் நம்ப முடியாது என்பதால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலினால் நமது ராணுவத்தினர் எல்லையோர பாதுகாப்பில் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வடகிழக்கு எல்லையோர பகுதிகளுக்கு சாலைகள் அமைத்து , நமது ராணுவத்தினர் மற்றும் படைகள் விரைவாக செல்ல உள்கட்டமைப்பு வசதிகள் செய்தனர். அது மட்டுமல்லாமல் சீனாவுடன் உள்ள பொருளாதார உறவை துண்டித்து, சீன செயலிகளுக்கும் நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நம் அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியில் உள்ள  எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 300க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உள்ளே நுழைய முற்பட்ட பொழுது , நமது ராணுவ எல்லை பாதுகாப்பு படையினர் 50 பேர் அவர்களை தடுத்து நிறுத்திய பொழுது ஏற்பட்ட மோதலில் நமது ராணுவத்தினர் 6 பேர் காயம் அடைந்ததாகவும், சீன வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த முறை போல இந்த முறையும் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய படையினர்கள் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைய நினைத்த சீன வீரர்களுக்கு அவர்கள் பாணியிலேயே கல்லேறி , முள் கம்பி சுற்றிய கட்டைகளால் தாக்குதல் என அதிரடி சரவெடியாக இந்திய வீரர்கள் பதிலுக்கு தாக்கி அவர்களை ஓட விரட்டி அடித்துள்ளனர். 

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இருக்கும் வரை நம் மண்ணில் ஒரு அடியை கூட கைப்பற்ற விடமாட்டோம் நம்முடைய வீரர்கள் தங்களுடைய வீரத்தை தேசப்பற்று மீண்டும் நிரூபித்துள்ளனர் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பிறகு தன் பங்குக்கு காட்டமாக காங்கிரஸ் லோக்சபாவில் அமளி செய்தது சீன எல்லையில் நடந்த மோதலுக்காக அல்ல, அவர்களின் ராஜீவ் காந்தி அறக்கட்டளை காண வெளிநாட்டு நன்கொடை லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால் தான், சீன மோதலுக்காக அவர்கள் அமைதியில் ஈடுபட்டிருந்தால், பாராளுமன்றத்தில் சீன தூதரகம் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஒன்று புள்ளி ஐந்து கோடி ரூபாய் வழங்கி பற்றியும், எதற்காக ராஜீவ் காந்தி கட்டளையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது என்ற உண்மையும் மக்கள் முன் தெரிவித்திருப்பேன் என்றும், மேலும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் சொந்த நலனுக்காக நம் நாட்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதை தியாகம் செய்தது குறித்தும், 1962 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது நம்முடைய எல்லையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சீனா  ஆக்கிரமித்தது குறித்தும், அருணாச்சலப் பிரதேசத்திற்கு மன்மோகன் சிங் சென்ற பொழுது சீனா எதற்கு கண்டித்தது என்று குறித்தும் சொல்வார்களா என்று காட்டமாக விளாசியுள்ளார். 

அருணாச்சல பிரதேச முதல்வரும் இது 1962 ஆம் ஆண்டு அல்ல யாராவது எல்லையில் அத்துமீற முயன்றால் நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி தருவார்கள் என்று கூறியுள்ளார். 

ராணுவ தளபதி மட்டத்தில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையால்தற்பொழுது அங்கு நிலைமை சீராக இருப்பதாகவும், இந்தியா - சீனா கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் கூட்டாக பாதுகாக்க வேண்டும் என்று சீன துறை செய்தி தொடர்பாளர் வென்பின் கூறியுள்ளார்..