கோலிவுட்டில் ஒரு மாஸ் மற்றும் என்டர்டைன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் இன்னும் சில மாதங்களில் சினிமா உள்ளகை விட்டு வெளியேறி மொத்தமாக அரசியல் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அதுவரை எந்த கட்சிக்கும் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு இல்லை என்ற வகையிலும் ஒரு அறிக்கையை திடீரென்று வெளியிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்
மேலும் அவரது ரசிகர்களுக்கு பெயர் அதிர்ச்சியையும் கொடுத்தார். சினிமா வட்டாரங்களில் விஜயின் இந்த அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கதாக உள்ளது ஏனென்றால் சினிமாவின் உச்சகட்ட பிரபலமாகவும் வெற்றி நாயகனாகவும் உள்ள விஜய் தற்போது தனது வெற்றியை ஒதுக்கிவிட்டு மக்கள் பணிக்காக செல்கிறார் அதனால் அவர் நிச்சயம் மக்களுக்கான திட்டங்களை கையில் வைத்திருப்பார் என்று பல பாராட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அரசியல் வட்டாரங்களிலோ, பல வகையான பேச்சுக்கள் உள்ளது இவர் எந்த கட்சியிடம் இணைவார் கமலஹாசனை போன்று ஆரம்பத்தில் தனித்து போட்டியிட்டு விட்டு பிறகு திமுகவுடன் இணைந்து கொள்வாரா ஏனென்றால் சினிமா பிரபலங்களுக்கும் திமுகவிற்கும் தான் அதிக நெருக்கம் இருக்கிறது என்ற ஒரு பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாக உள்ள கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து எச். வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு சற்று சரிவை கண்டது. அதாவது தோழா என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார் விஜய். தோழா படம் இன்றளவும் பல தமிழ் மக்களின் பேவரைட் படமாக இருந்து வருகிறது அதனால் வம்சிப் பைடி பள்ளியின் இயக்கத்தில் தயாரான வாரிசு திரைப்படம் அதில் விஜய் வேறு நடிக்கிறார் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானதிலிருந்து படம் மொத்தமாக திரையரங்களில் வெளியானது வரை அனைத்துமே பெரும் சர்ச்சையை சந்தித்தது அதிலும் குறிப்பாக அனைத்தும் காப்பியடிக்கப்பட்டதாக ஒரே கிரிஞ்சாக இருப்பதாகவும் பெருமளவு விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்த குஷ்புவின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது குறித்து நடிகை குஷ்பூ ஓபன் ஆக பேசி உள்ளார். அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் இடையே மிகவும் எமோஷனலான காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த படத்தில் என்னுடைய சீன்களில் முழுக்க முழுக்க நானும் விஜய்யும் மட்டும்தான் இணைந்து நடித்திருந்தோம் மற்ற நடிகர்களோடு எனக்கு எந்த ஒரு சீனும் இல்லை அதுமட்டுமின்றி என்னுடைய காட்சிகள் ஒரு தனி டிராக் ஆக பயணித்து பிறகு குடும்பத்தோடு இணைவது போன்ற ஒரு அழகான முடிவை கொண்டிருந்தது. ஆனால் அந்த காட்சி படத்தின் நீளம் காரணமாக நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் நேரில் வந்து என்னிடம் கூறினார்.
அதனால் நான் என்னுடைய சீன் அத்தனையும் நீக்கிவிட வேண்டும் என்று கூறி விட்டேன். அதனால் தான் என்னுடைய காட்சிகள் அனைத்தும் அந்த படத்தில் நீக்கப்பட்டது. எனக்கும் விஜய்க்கும் அந்த காட்சிகள் மிகவும் எமோஷனலாகவும் அழகாகவும் இருக்கும் அவை படமாக்கப்பட்ட போது நானும் விஜயும் அழுதுவிட்டோம் படம் வெளியான பிறகு கூட இது குறித்து நாங்கள் பேசினோம் என்று வாரிசு திரைப்படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.