நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த நிலையை 'ஒரு நாள் அமலாக்கத்துறை நிச்சயம் செந்தில்பாலாஜியை நெருங்கும்' என்று முன்கூட்டியே தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் டாஸ்மார்க் கடைகளில் நடக்கும் ஊழல் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட சாவுகளை கண்டித்து மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக அப்பொழுது இருந்த செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அண்ணாமலை புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான வீடியோக்களால் வருமானவரித்துறை செந்தில் பாலாஜி தரப்பினர் மீது சோதனையில் ஈடுபட்டது. முன்னதாக கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி செய்த மோசடி வழக்கிற்காக அமலாக்கத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று அண்ணாமலை கூறி வந்ததும் தற்போது நிகழ்ந்து வருகிறது. மேலும் செந்தில் பாலாஜி ஈடுபட்ட மோசடிகளை பற்றி வருமானவரித்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்ற வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் தற்போது தெரிவித்தது தமிழக அரசியலை சூடேற்றியுள்ளது.
அதாவது திமுகவின் சொத்து பட்டியல் முதல் பாகத்தை வெளியிட்டதால் திமுகவை சேர்ந்த எம்பி டி ஆர் பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்தார் விசாரணை நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது அதற்கு ஆஜரான அண்ணாமலை விசாரணை நிறைவடைந்த உடன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், 'என்மன் என் மக்கள் பாத யாத்திரைக்கு முன்பாக திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் வெளியாகும், சத்திய பிரமாணத்திலேயே டி ஆர் பாலு பொய் கூறியுள்ளதால் அவரது குடும்பம் மொத்தத்தையும் கூண்டில் ஏற்றாமல் விடப்போவதில்லை, நாங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் கூற வேண்டும் திமுக அமைச்சரை போன்று நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்குச் செல்லப் போகக்கூடியவர்கள் நாங்கள் அல்ல, எங்களிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது என்று செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லாமல் தனது கருத்தை முன் வைத்தார்.
இறுதியில் திமுகவின் சொத்து பட்டியல் பாகங்கள் இரண்டைத் தாண்டி பல பாகங்கள் செல்லவும் வாய்ப்பு உள்ளது. சிபிஐயிடம் முதல்வர் ஸ்டாலின் மீதும் புகார் கொடுத்துள்ளோம் விரைவில் அவரும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அண்ணாமலை கூறியது திமுக தலைமையை திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி பற்றி அண்ணாமலை கூறிய ஒவ்வொன்றும் தற்பொழுது நடந்துவருகிறது. மேலும் அமலாக்கத்துறை மட்டுமல்லாது மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், வருமானவரித்துறையும் வரு தனித்தனியாக செந்திபாலாஜியை நெருங்கி வருகின்றனர். இதன் காரணமாக ஒருதுறையிடம் தப்பித்தால் மற்றொரு துறையிடம் சிக்கும் நிலையில் இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி!
இந்நிலையில் தற்போது முதல்வரை குடும்பத்தை நோக்கி சிபிஐ வரும் என அண்ணாமலை கூறியதும் முதல்வர் மீது சிபிஐ யிடம் புகார் கொடுத்துள்ளோம் என்று கூறியதும் ஏற்கனவே செந்தில்பாலாஜி விவகாரத்தில் அரண்டு போயிருக்கும் கோபாலபுரத்தை தற்போது மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏனென்றால் அண்ணாமலை செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் கூறியது போல் நடந்துள்ளது அதே போன்று முதல்வர் விவகாரத்திலும் அவர் கூறிய சிபிஐ விவகாரம் நடக்கும் என்றும் கமலாய வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி வரும்பட்சத்தில் அது கண்டிப்பாக தேசிய அளவில் பேசுபொருளாக மாறும் எனவும் கூறுகின்றனர்!