24 special

குறிக்கப்பட்ட நாள்...! இதுமட்டும் நடந்த அறிவாலய அரசுக்கு பெரிய ஆப்புதான்...!

mk stalin, india kootani
mk stalin, india kootani

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கடந்த மாதம் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடப்பதாக அறிவித்தது.மேலும் பாஜக அரசு இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அறிவித்த உடன் எதிர்க்கட்சிகளிடமிருந்து பல எதிர்ப்புகள் கிளம்பின, மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை திட்டங்களை வகுப்பதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான கொள்கைகள் அனைத்தும் வகுக்கப்படும் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.


இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தக் கூட்டத் தொடரில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட போகின்றன மற்றும் என்னென்ன மசோதாக்கள் நிறைவேற்றப்பட போகின்றன என்பது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் மத்திய அரசு வெளியிட்டதிலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் அதற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற செய்தி இதழில் அரசியல் சாசனம் தொடங்கப்பட்டு இன்றுவரை 75 ஆண்டுகள் ஆகிய நிலையில் நாடாளுமன்றத்தின் சாதனைகள் அனுபவங்கள் மற்றும் நினைவுகள் விவாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மட்டுமில்லாமல் குளிர்கால கூட்டத் தொடரின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட மசோதாக்கள் ஆன தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது மற்றும் பிற தேர்தல் ஆணையரை நியமிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக  இதழில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதோடு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை பற்றியும் விவாதங்கள் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு பாஜகவினரை கொறடா கேட்டுக் கொண்டுள்ளார், இது மட்டுமில்லாமல் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கண்டிப்பாக கட்சியில் உள்ள தொண்டர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையரை நியமிப்பது மற்றும் பிற ஆணையரை நியமிப்பது குறித்த விவாதங்களில் கண்டிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்குவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இப்போது இருந்தே அவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்ச்சி நிரல், பழைய நாடாளுமன்ற கட்டடத்திலும் மறுநாள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் இந்தக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை குறித்து விவாதிக்கப்படும்போது எதிர் கட்சிகளின் எதிர்ப்பலைகள் அதிக அளவில் இருக்கும் என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதன் பின்னணியை விசாரித்த போது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை குறித்து ஏற்கனவே குழு அமைத்து விசாரிக்க கோரி உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் இதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்த போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நடைமுறைப்படுத்தலாமா அல்லது சிறிது நாட்கள் கழித்து அறிமுகப்படுத்தலாமா என்ற விவாதங்களும் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கும் நிலையில் அதற்கான மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி நிறைவேற்றும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக ஆட்சிக்கு இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சனம் எழுந்துள்ளது..