கடந்த இரு தினங்களுக்கு முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி மற்றும் 61வது குருபூஜை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது, கடந்த 28ஆம் தேதி துவங்கிய விழா மிகவும் விமர்சையாக தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக பசும்பொன்னில் சனிக்கிழமை ஆன்மீக விழா தொடங்கி இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது. அதன் பிறகு பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஏராளமான ஒரு பால்குடம் எடுத்தும் இளைஞர்கள் ஜோதி ஓட்டத்துடன் வந்தும் தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு சமுதாய தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர், இது மட்டுமல்லாமல் பாஜக தரப்பிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவர் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இப்படி தமிழகம் முழுவதும் இருந்து அரசு சார்பிலும் மக்கள் சார்பிலும் விழாவாக கொண்டாடப்பட்ட நிகழ்வு நடந்து முடிந்ததும் நடந்ததை பற்றி பல்வேறு பல்வேறு விஷயங்கள் வெளியில் வந்துள்ளன. குறிப்பாக திமுகவின் எம்.பியும், முதலமைச்சர் ஸ்டாலினும் தங்கைமான கனிமொழி அவர்கள் தேவர் ஜெயந்தி விழாவை செய்த காரியம் தான் தற்போது இணையங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடியில் தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார் கனிமொழி, இந்த சூழலில் அப்பொழுது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற சமயம், அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பெரிய அளவில் இந்துமத அடையாளங்களை குறிப்பாக பெரிய தலைவர்களின் படங்களில் உள்ள சமய அடையாளங்களான விபூதி அழிப்பது போன்றவை பெருமளவில் செய்யப்பட்டு வந்தன.
அந்த சமயத்தில் 2020 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையை முன்னிட்டு அவரது படத்தை பகிரும் பொழுது கனிமொழி அவர்கள் முத்துராமலிங்க தேவரின் நெற்றியில் இருந்த விபூதி இல்லாமல் படத்தை பதிவேற்றி தனது அஞ்சலியை செலுத்தினார், அது அப்பொழுது பெரும் சர்ச்சையானது. கனிமொழி அவர்கள் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார், இந்து மத அடையாளங்களை அழிப்பதே திமுகவினர் வேலை ஆகிவிட்டது.
ஏன் விபூதி இருக்கக் கூடாதா? இப்படித்தான் திருவள்ளுவருக்கும் நெற்றியில் இருந்த விபூதியை நீக்கினார்கள் ஏன் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அனைத்து காரியங்களும் திமுக செய்ய வேண்டும் என்பது போன்ற பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்பொழுது திமுகவிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அதன் காரணமாக வரும் தேர்தலில் பெரும் அளவில் வாக்கு வித்தியாசத்தில் திமுக எம்பிக்கள் பின்னடைவை சந்திக்கலாம் என்ற சில சர்வே தகவல்களும் வெளிவருகிறது.
இதன் காரணமாக தற்பொழுது நடந்த குருபூஜையை முன்னிட்டு கனிமொழி அவரது எக்ஸ் பதிவில் முத்துராமலிங்கத் தேவரின் புகைப்படத்தை பதிவிடும் பொழுது நெற்றியில் நிறைய விபூதி இருக்குமாறு படத்தை வெளியிட்டுள்ளார். தற்பொழுது தேர்தல் வர இன்னும் சில காலம் இருப்பதால் நெற்றியில் விபூதியோட இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் படத்தை பகிர்ந்து உள்ளார் எல்லாம் இந்துக்கள் வாக்கு வங்கி ஏற்படுத்திய பயம் அது மட்டுமல்லாமல் வரும் தேர்தலில் தூத்துக்குடியை குறி வைத்து கனிமொழி மீண்டும் போட்டியிட திட்டமிட்டு இருப்பதால் இந்த முறை வாக்குகள் அடி வாங்கினால் என்ன செய்வது என்ற பயத்தின் காரணமாகவே கனிமொழி இப்படி செய்துள்ளார் என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.