24 special

இத்தனை வருஷ அனுபவம் இருக்க என்னையே தண்ணி குடிக்க வச்சுட்டாங்க...! சரத்பவார் கொடுத்த செய்தி...!

Sarathpawar, shivakumar
Sarathpawar, shivakumar

1958 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த சரத் பவாரின் தாயார் உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினராகவும் தந்தையார் உள்ளூர் விவசாய தலைவராகவும் இருந்துள்ளனர். அரசியலில் நுழைந்து முதல் தேர்தலை சந்தித்த பொழுதும் தேர்தலில் வெற்றியை பெற்ற சரத் பவார். 1982 ஆம் ஆண்டு சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் அரசியலில் நுழைந்தார் அச்சூழ்நிலையில் இவர்கள் இருவர் மட்டுமே குடும்ப உறுப்பினர்களாக அரசியலில் இருந்துள்ளனர். அஜித் பவார் அரசியலில் நுழைந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலே வெற்றி பெற்றாலும் அந்த பதவியை அவரது சித்தப்பாவாகிய சரத் பவாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பிறகு 1999 ஆம் ஆண்டு இந்திய  தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. பிறகு நடைபெற்ற 1999 ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியுற்று சிவசேனா பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது சரத் பவார் எம் பி ஆனார், அஜித் பவார் மாநில அரசியலிலே தனது கவனத்தை செலுத்தி வந்தார். 


2004 லில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றது பெரும்பான்மையான வாக்குகளை தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் பதவியை காங்கிரசிற்கு விட்டு கொடுத்தார் சரத் பவார். இதிலிருந்தே சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையே சிறு விரிசல் ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது.  இந்த நிகழ்விற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் நுழைந்து சட்டசபை உறுப்பினராகிய பிறகு தான் சரத் பவார் மற்றும் அஜித் பவாருக்கு இடையே விரிசல் மிகவும் பெரிதாகி தற்போது நடக்கும் சூழலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவர் விலகி அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களுடன் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். 

அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்ற பொழுது கூட தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இருந்த பெரும்பான்மையான தொண்டர்கள் அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் சரத் பவார் இப்படி நடப்பதெல்லாம் சகஜம் அதைத் தாண்டி தான் நான் இவ்வளவு தூரத்தில் இருந்து நிற்கிறேன் என்று கூறியிருந்தார். இருப்பினும் அஜித் பவார் தன்னுடன் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் மற்றும் தேசியவாத கட்சியின் தொண்டர்கள் இருப்பதால் கட்சியின் பெயரும் சின்னமும் எங்களுக்கே உரியது என்று கூறியுள்ளார், மேலும் அவர், நான் துணை முதல்வராக பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 20 ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த சரத் பவாரையே கட்சியிலிருந்து நீக்கி நான் தலைவராக பதவியேற்றேன் என்று கூறியுள்ளார். 

இதனை தொடந்து கடந்த எட்டாம் தேதி சரத் பவார் தனது தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களை சந்தித்து கட்சி பொறுப்பை தனது மகளிடம் ஒப்படைத்து விட்டு நாசிக், புனே, சோலாப்பூர் மற்றும் விதர்பா மண்டலத்தில் உள்ள மாவட்டம் போன்ற இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அஜித் பவார் தரப்பு தகவல்களை தெரிவித்தது. மேலும் சரத் பவார் ஓய்வெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் சரத் பவார் தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கியவர்களிடம் இனியாவது உஷாராக இருக்கவேண்டும், தேசிய அளவில் இத்தனை ஆண்டு கால அனுபவம் இருக்கும் எனக்கே இந்த நிலை என்றால் மற்ற மாநில கட்சிகள் நிலை என்ன? என எச்சரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.