24 special

அழகு கிடைச்சிடுச்சு ஆனா எச்ஐவி வந்துடுச்சே..! படுகுழியில் தள்ளும் வேம்பையர் பேசியல்!

BEAUTY HIV
BEAUTY HIV

இன்றைய இளைஞர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். வீட்டிலேயே எளிமையாக ஒரு மேக்கப் கிட்ட வாங்கி வைத்து அதனை பயன்படுத்தி ஃபுல் மேக்கப்பில் வெளியில் சென்று வருகிறார்கள், அதே நேரத்தில் சிலர் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா சென்று பேசியல் செய்து கொண்டு அங்கு என்னென்ன வசதிகள் மற்றும் அழகு முறைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் செய்து விட்டு பிறகு நேரடியாக தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறார்கள். இதில் பெண்கள் மட்டும் முனைப்பு காட்டுவதில்லை ஆண்களும் தற்பொழுது தன் முகத்தில் பொலிவுடன் பளபளக்காகவும் பளிச்சென்று காண்பிப்பதற்கும் பல சிகிச்சை முறைகளை கையாளுகிறார்கள். இதற்காகவே பல அழகு சாதன கிளினிக்குகள் செயல்பட்டு வருகிறது அங்கு சென்று தன் முகப்பொலிவுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படி ஆண்களும் பெண்களும் தனது முகத்தை பொலிவுடன் காண்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிற நிலையில் அழகுகாக அவர்கள் பயன்படுத்துகின்ற ஒரு முறை அவர்களுக்கே தற்போது தீங்காக மாறி உள்ளது. 


அதாவது செலிப்ரிட்டி பேசியல் என்று கூறப்படுகின்ற வேம்பையர் பேசியல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வந்த இந்த முறை தற்போது இந்தியாவிற்குள் வந்து அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை போன்ற பெரு மாநகரங்களில் சாதாரண சிறு கிளினிக்கில் இந்த ஃபேஷியல் செய்யப்படுகிறது. இந்த முறையில் எந்த ஒரு ரசாயன மற்றும் செயற்கை கிரிம்கள் பயன்படுத்தப்படாமல் ஒருவரது உடலில் இருந்து 8 மில்லி அளவில் ரத்தம் எடுக்கப்பட்டு அந்த ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மீதம் இருப்பதை இன்ஜெக்ஷன் மூலம் முகத்தில் செலுத்துகிறார்கள். இப்படி முகத்தில் இன்ஜெக்ஷனை ஆங்காங்கே செலுத்துவதன் மூலம் வலி ஏற்படாமல் இருப்பதற்காக சிகிச்சை மேற்கொள்வருக்கு அனஸ்தீசியாவும் வழங்கப்படுகிறது. இந்த முறை மூலம் பருக்கள், நீங்காத கருமைகள், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற அனைத்தையும் நீக்கி நல்ல ரிசல்ட் தன் முகத்தின் பொலிவிற்கு கொடுப்பதால் பல இளைஞர்கள் தற்போது இதனை நோக்கி செல்கின்றனர். ஆனால் இந்த முறை மூலம் கிட்டத்தட்ட 59 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதாவது அமெரிக்காவில் இந்த பேசியலை செய்து கொண்ட மூன்று பெண்களுக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது குறித்த பரிசோதனை மற்றும் விசாரணையை மேற்கொண்ட அமெரிக்காவின் சி டி சி எனப்படும் நோய் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. மேலும் ctc வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் நியூ மெர்சிகோவில் செயல்பட்டு வந்த ஒரு ஸ்பாவில் வேம்பையர் பேசியல் செய்த பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதும் அதற்கு பிறகு அவரை தொடர்ந்து அதே ஸ்பாவில் வேம்பையர் பேசியல் செய்து கொண்ட இரண்டு பெண்களுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இதே பாவை கிட்டத்தட்ட 59 பேர் வேம்பையர் பேசியலை செய்து கொண்டதாகவும் அவர்கள் அனைவரும் எச்ஐவி குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவில் உள்ள ஸ்பாக்கள் முழுவதிலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த வேம்பையர் பேசியலை செய்து கொண்ட மூன்று பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது பல நாடுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறையை அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாது முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவர்கள் மூலமே செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், முன்பெல்லாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி இயற்கையாகவே வீட்டில் செய்து கடலை மாவு பயித்த மாவுகளை பயன்படுத்தி முகப்பொலிவுகளை பெற்ற காலம் போகி சிகிச்சை மேற்கொண்டு முகப்பொலிவுகளைப் பெற விழைந்து ஹச் ஐ வி யை  பெற விழைகிறார்களே என்ற விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது!