
இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களில் தற்போது மிகவும் பிரபலமான ஒரு தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் கே. இ. ஞானவேல் ராஜா. இவர் திரைப்படங்களை தயாரிப்பது மட்டுமின்றி அதனை தயாரித்து விநியோகமும் செய்து வருகிறார். மேலும் திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டூடியோ கிரீன்,ஆதனா ஆர்ட்ஸ், புளு கோஸ்ட் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்களின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். முதல் முதலில் ஜில்லுனு ஒரு காதல் என்னும் திரைப்படத்தில் சூர்யாவை வைத்து இயக்கினார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் சிங்கம் என்னும் திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு கார்த்தியை வைத்து பிரியாணி, நான் மகான் அல்ல என்னும் திரைப்படங்களை தயாரித்து வந்தார். இவர் சிவகுமாரின் உறவினர் என்பதால் அதிக அளவில் சூர்யாவையும் கார்த்தியும் வைத்து பல படங்களை இயக்கி வந்தார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் அதிக அளவில் வெற்றி பெற்ற மக்கள் அனைவரும் வரவேற்பை தொடர்ந்து தந்து வந்தனர்.
மேலும் சூர்யா நடிப்பில் வரப்போகுது அங்குவா திரைப்படமும் அதிக அளவில் பவுச் அளவில் செய்து தயாரித்து வருகிறார். இப்படி சூப்பராக தனது திரைப்பட உலகில் வெற்றி நடை போட்டு வந்த ஞானவேல் ராஜா வீட்டில் நகை திருடு போய் உள்ளது!! குறித்த செய்தியை விரிவாக காணலாம்!!சென்னையில் தியாகராயர் நகரில் உள்ள ஜெகதீஸ்வரன் தெருவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீடு அமைந்துள்ளது. அங்கு தான் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஞானவேல் ராஜா அவரின் மனைவி நேகாவிற்கு தங்க நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த தங்க நெக்லஸ் தற்போது காணவில்லை என்றும் அதனை அந்த வீட்டில் கடந்த நான்கு வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பணிப்பெண் லட்சுமி தான் திருடி உள்ளார் என்றும் அந்தப் பெண்ணிடம் அந்த நகையினை பற்றி விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பணி பெண்ணோ நான் நகைகளை எடுக்கவில்லை என்று கூறியதாகவும் அடுத்த நாளிலிருந்து அந்தப் பணிப்பெண் வேலைக்கு வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
அவர் பணிக்கு வராமல் இருந்ததால் அவரின் மீது சந்தேகம் அதிகரிக்க, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவரின் மேலாளரிடம் கூறி மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அழித்துள்ளார். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் பணிப்பெண் லட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பணிப்பெண் தனது வீட்டில் இருந்த அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவரின் உயிருக்கு போராடும் நிலையில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பணிப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையும் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தனது தாய் செய்யாத குற்றத்திற்காக அவரின் மீது பொய்யான புகார் கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பணிப்பெண் லட்சுமியின் மகள் புகார் அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து எந்த தவறும் என் தாய் செய்யவில்லை என்று கூறுவதற்காக ஞானவேல் ராஜாவின் வீட்டிற்கு சென்ற போது ஞானவேல் ராஜாவின் மனைவி நேகா மிகவும் திமிராக பதில் சொல்லியதாகவும், எனது தாய்க்கு தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் அதனால்தான் என் தாய் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று பணிப்பெண்ணின் மகள் கூறியுள்ளார். இப்படி இரு புறத்திலிருந்தும் புகார் அளிந்துள்ளதால் போலீசார் தொடர்ந்து இரு பக்கமும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்!! மேலும் இந்த விவகாரத்தைப் பற்றி கேள்விப்பட்ட சூர்யாவின் குடும்பத்தினர் ஏன்டா மானத்தை வாங்குற என சொல்லி ஞானவேல் ராஜாவே அதிகமாக பேசியதாகவும் தகவல்கள் ரசிக்கின்றனர்